ஆக்சிஸ் வங்கி ₹2 கோடிக்கும் குறைவான தொகைக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. புதிய FD விகிதம் 26 ஜூலை 2023 முதல் அமலுக்கு வருவதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது சாதாரண மக்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி 3.50 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
Advertisment
புதிய வட்டி விகிதம்
7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.50% வட்டி விகிதமும், 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்கு 4% வட்டி விகிதமும் வங்கி உத்தரவாதம் அளிக்கிறது.
அதேபோல், 61 நாள்கள் முதல் மூன்று மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, வங்கி 4.50% வட்டி விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, ஆக்சிஸ் வங்கி 4.75% வட்டி விகிதத்தை உறுதியளிக்கிறது.
தொடர்ந்து, 13 மாதம் முதல் 14 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.10% வட்டி வழங்குகிறது.
எண்
மாதங்கள்
வட்டி
01
14 months < 15 months
7.10%
02
15 months < 16 months
7.10%
03
17 months < 18 months
7.10%
04
18 Months < 2 years
7.10%
05
2 years < 30 months
7.05%
06
30 months < 3 years
7.00%
07
3 years < 5 years
7.00%
08
5 years to 10 years
7.00%
வட்டி விகிதம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“