Axis Bank Tamil Nadu News, Axis Bank News In Tamil, Axis Bank Latest Tamil News, Axis Bank Chennai News, ஆக்சிஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி கடன், ஆக்சிஸ் வங்கி கடன் தவணை
Axis Bank Tamil News: இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 1 முதல் மே 31, 2020 வரையிலான காலத்திற்கு ஈஎம்ஐ/ கடனுக்கு செலுத்தவேண்டிய வட்டி, கடன் அட்டைக்கு செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை வசூலிப்பதை ஒத்திப்போட கேட்டுக்கொண்டது. இதன் பேரில், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈஎம்ஐ செலுத்துவதை ஒத்திப்போடும் திட்டத்தை தேர்வு செய்ய அனுமதிக்கும் வசதியை கொண்டுவந்துள்ளன.
Advertisment
தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஈஎம்ஐ ஒத்திப்போடும் திட்டத்தை தேர்வு செய்ய குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியில் ஈஎம்ஐ ஒத்திப்போடும் வசதியை எவ்வாறு தேர்வு செய்வது என்பதற்கான படிப்படியான வழிமுறை
Axis Bank moratorium on emi: ஆக்சிஸ் வங்கி கடன் தவணை தள்ளிவைப்பு
1) http://tiny.cc/jijemz என்ற இணைப்பை சொடுக்கவும். அடுத்து வரும் திரையில் உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை நாட்டின் கோடுடன் (country code) உள்ளீடு செய்யவும். திரையில் தெரியும் captcha வை தட்டச்சு செய்து சமர்பிக்கவும்.
2) உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். OTP ஐ தட்டச்சு செய்ததும் ஒரு புதிய திரை திறக்கும்.
3) அந்த திரையில் உங்கள் பெயர் மற்றும் வாடிக்கையாளர் எண் (customer ID) காட்டப்படும். நீங்கள் ஆக்ஸிஸ் வங்கி கடன் தவனை ஒத்திப்போடும் திட்டத்தை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்றால் "AXIS BANK LOAN" என்பதை தேர்ந்தெடுக்கவும். கடன் அட்டை நிலுவை (outstanding), கடன் அட்டை லோன் ஆகியவற்றை ஒத்திப்போடுவதை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்றால் "AXIS BANK CREDIT CARD" என்பதை தேர்ந்தெடுக்கவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தி சமர்பிக்கவும்.
4) உங்கள் கோரிக்கை பெறப்பட்டது என்பதற்கான ஒரு உறுதிப்படுத்தும் செய்தி ஆக்ஸிஸ் வங்கியால் காண்பிக்கப்படும்.
இது செலுத்த வேண்டிய கடன் தவனையை தள்ளிப்போடும் திட்டம் மட்டும்தான். மாறாக கடன் தவனை தள்ளுபடியோ அல்லது சலுகையோ இல்லை. ஒப்புக்கொள்ளப்பட்ட / பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் நிலுவையில் உள்ள அசல்/ பயன்படுத்தப்பட்ட தொகைக்கு வட்டி தொடர்ந்து பெருகும்.
பொதுவாக வங்கிகளில் தவணை தள்ளுபடி என்கிற பெயரில் சில மோசடி ஆசாமிகள் உங்களுக்கு ஓடிபி அனுப்பிவிட்டு, அதனை கேட்பார்கள். மறந்தும்கூட செல்போனில் வரும் ஓடிபி எண்களை யாரிடமும் கூறாதீர்கள். அது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் கும்பலின் சதி. அதற்கு இரையாகாமல், வங்கியின் அறிவுறைப்படி நடந்து கொள்வது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"