Advertisment

பண்டிகை ஆஃபர்; ஹோம் லோனுக்கு 12 மாத தவணை தள்ளுபடி: முக்கிய வங்கி அதிரடி சலுகை

Axis Bank to waive 12 EMIs on select home loans under festive offer: வீட்டுகடன் தவணை தள்ளுபடி; கட்டணமில்லா வாகன கடன்; ஆக்சிஸ் வங்கியின் தீபாவளி அதிரடி சலுகைகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பண்டிகை ஆஃபர்; ஹோம் லோனுக்கு 12 மாத தவணை தள்ளுபடி: முக்கிய வங்கி அதிரடி சலுகை

இந்தியாவின் முக்கிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுக்கடன்களுக்கு 12 இஎம்ஐ -களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த வங்கியின் தீபாவளி திருவிழா சலுகையின் ஒரு பகுதியாக பல்வேறு ஆன்லைன் விற்பனை சேவைகளுக்கு தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.

Advertisment

ஆக்சிஸ் வங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுக்கடன் தயாரிப்புகளில் 12 இஎம்ஐ-களை தள்ளுபடி செய்வதாகவும், இரு சக்கர வாகன வாடிக்கையாளர்களுக்கு எந்த செயலாக்கக் கட்டணமும் இல்லாமல் ஆன்-ரோட் (முழு தொகை) விலையில் ஃபைனான்ஸை வழங்குவதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வணிகர்களுக்கு, டேர்ம் லோன் கடன்கள், உபகரணங்கள் வாங்குவதற்கான கடன் மற்றும் வணிக வாகன கடன் ஆகியவற்றில் பல நன்மைகளை ஆக்சிஸ் வங்கி வழங்குகிறது.

‘தில் சே ஓபன் கொண்டாட்டங்கள்: கியூங்கி தீபாவளி ரோஸ் ரோஸ் நஹி ஆதி’ (இதயப்பூர்வமான கொண்டாட்டங்கள்; ஏனென்றால் தீபாவளி தினமும் வருவதில்லை) என்று அறிவித்த வங்கி, ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் உணவகங்கள் மற்றும் பிற சில்லறை கடன் தயாரிப்புகளில் ஷாப்பிங் செய்வதற்கான சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதாக அறிவித்தது.

50 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,500 உள்ளூர் வணிகர்களிடமிருந்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த கடைகளில் செய்யப்படும் ஷாப்பிங்கிற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

"இந்த பண்டிகை காலங்களில் நாங்கள் மதிப்புமிக்க பிராண்டுகள் மற்றும் உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுடன் கூட்டாக இணைந்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் மற்றும் கடன் தயாரிப்புகளில் பெரும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் நாங்கள் தொடர்ந்து கொண்டாட்டங்களைச் சேர்க்க விரும்புகிறோம், ”என்று ஆக்ஸிஸ் வங்கியின் சில்லறை கடன் பிரிவின் குரூப் எக்ஸிகியூட்டிவ் மற்றும் தலைவர், சுமித் பாலி,  தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Home Loans Axis Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment