axis netbanking axis bank netbanking : நமக்கு கிடைக்கும் பணத்தை வங்கியில் சேர்த்து வைத்து அதை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் அடிப்படை மக்களுக்கு மினிமம் பேலன்ஸ் என்பது மிகப்பெரிய பிரச்சனை.எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான்.
Advertisment
இனி அந்த கவலையை விடுங்க. அக்கவுண்ட் ஓபன் பண்ணா ரூ. 20,000 கிடைக்கும். தெரியுமா? மினிமம் பேலன்ஸ் பற்றி புலம்புவதை விட்டுட்டு இந்த அக்கவுண்ட் ஓபன் பண்ற வழிய பாருங்க. ஆக்ஸிஸ் பேங்கில் தான் இந்த புதிய அறிவிப்பு.
axis netbanking axis bank netbanking : ஆக்சிஸ் லிபர்ட்டி சேமிப்பு கணக்கு !
இந்த கணக்கை ஓபன் செய்தால், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக மாதத்திற்கு 25,000 ரூபாய் வைத்திருக்கலாம் அல்லது வங்கியின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் அதே அளவு செலவு செய்யலாம். இதுமட்டுமல்லாமல் ரூ.20,000 காப்பீட்டுத் தொகையையும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.35 வயதிற்கு உட்பட்ட சம்பளம் பெறுபவர்கள் இந்த கணக்கை ஓபன் செய்ய தகுதியானவர்கள்.
வங்கிக் கணக்கில் இருக்க வேண்டிய தொகை மற்றும் வாடிக்கையாளர்கள் செலவு செய்ய விரும்பும் தொகை இவை இரண்டையும் கையாளும் வகையில் இத்திட்டம் உள்ளது. வார இறுதி நாட்களில் செய்யும் செலவுகளுக்கு கேஷ் பேக் சலுகை, உணவு, பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் பயணம் போன்ற பெரும்பாலான சேவைகளுக்குச் சலுகை போன்ற வசதிகள் உள்ளன. அதேபோல செய்யும் செலவுகளுக்கு மாதாந்திர பரிசுக் கூப்பன்களும் கிடைக்கும்.
வழக்கமான ஆக்சிஸ் வங்கி சேமிப்பு வங்கிக் கணக்குகள் வழங்குவதைப் போன்ற வட்டி விகிதங்களை இந்த லிபர்ட்டி சேமிப்பு கணக்குகளிலும் உங்களால் பெற முடியும். இத்திட்டத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம் காப்பீடு. மருத்துவமனை சிகிச்சைகளுக்குத் தினசரி அடிப்படையில் ரூ.20,000 என மருத்துவக் காப்பீடு தொகை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil