sbi bank state bank state bank of india interest sbi bank
bank account bank savings account bank account savings : ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பார்கள். வணிகம் அல்லது அதிக பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அது சில நேரங்களில் நல்லது தான். எனினும் தேவையில்லாமல் அதிக சேமிப்பு கணக்கு வைத்துக்கொள்வதால் ஏற்படும் பதிப்புகள்.
Advertisment
வங்கிகள் அடிப்படை சேமிப்பு கணக்குகளை மினிமம் பேலன்ஸ் ஏதுமின்றி வழங்குகின்றன. ஆனால் இணையதள வங்கி சேவை, ஏடிஎம் கார்டு, செக் புக் சேவை என வங்கி வழங்கும் அனைத்து சேவைகளையும் பெற குறைந்தது 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மினிமம் பேலன்ஸை சேமிப்பு கணக்கில் நிர்வகிக்க வேண்டும் என்கின்றன.
சில தனியார் வங்கிகள் மெட்ரோ நகர சேமிப்பு கணக்குகளுக்குக் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றன.
வங்கிகள் கூறும் மினிமம் பேலன்ஸை நிர்வகிக்கவில்லை என்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டி வரும். அவசர காலத்திற்குப் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். நிர்வகிக்கும் அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் மின்மம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
சம்பள சேமிப்பு கணக்கு என்றாலும் வேறு நிறுவனத்திற்கு மாற்றம் பெறும் போது வேறு வங்கியில் கணக்கு திறந்துவிடால், பழைய கணக்கு சில மாதங்களில் சாதாரண சேமிப்புக் கணக்காக மாறிவிடும். பின்னர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். எனவே ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் போது பழைய நிறுவனத்தின் சம்பளக் கணக்கையும் சேர்த்து மூடுவது நல்லது.
கட்டணங்கள்:
வங்கிகள் டெபிடி கார்டு, எஸ்எம்எஸ் சேவைகள் போன்றவற்றுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும் போது இந்தச் செலவு அதிகரிக்கும். சில வங்கிக் கணக்கில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால் கணக்கு செயல்படாத நிலைக்குச் சென்றுவிடும். அதனை மீண்டும் செயல்படுத்த 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
லாபம் குறைவு:
மினிம் பேலன்ஸ் 1000 ரூபாய் உள்ள 3 வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கிறோம் என்றால், 3000 ரூபாய் அதற்காக ஒதுக்கிவிட வேண்டும். இதுவே ஒரு சேமிப்புக் கணக்கு என்றால் மீதம் உள்ள 2000 ரூபாயை ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும்போது ஆண்டுக்கு 6.5 சதவீதத்திற்கும் கூடுதலான லாபத்தை அளிக்கும். சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 3 முதல் 4 சதவீத லாபத்தை மட்டுமே வங்கிகள் அளிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil