பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வங்கிகள் சொல்வது அனைத்தையும் நம்பி சில தேவையற்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எப்போதுமே இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி திட்டங்களை வருங்காலத்திற்கு நல்லது சில உங்களுக்கு தேவையில்லாத திட்டங்களில் இணையும் நிலை ஏற்படலாம். இதில் நீங்கள் எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள்:
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக 15 முதல் 30 நாட்கள் ப்ரீ லாக் இன் வசதியினை அளிக்கின்றன. இந்த ப்ரீ லாக் இன் வசதி விண்ணப்பத்தினைப் பூர்த்திச் செய்த நாள் முதல் கிடையாது என்பது பாலிசிக்கான ஆவணத்தினைப் பெற்ற நாள் முதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தையில் இணைக்கப்பட்டுள்ள காப்பீடு திட்டங்கள் அல்லது எண்டோவ்மெண்ட் திட்டங்கள் குறித்த தவறான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தால் ப்ரீ லாக் இன் காலத்தில் பணத்தினைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
பணத்தை சேமிக்கவும் சரி, சேவை கட்டணமும் சரி வங்கியை விட அம்சமான அஞ்சல் சேமிப்பு!
பிக்சட் டெபாசிட்
பிக்சட் டெபாசி திட்டத்தினை ஏமாற்றி விற்று இருந்தால் முதிர்வு காலம் முன்பே பணத்தினை வித்டிராவ் செய்யலாம். சில வங்கி நிறுவனங்கள் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் பிக்சட் டெபாசிட் பணத்தினைத் திரும்பப் பெறும் போது அபராத தொகையினைப் பெறுகின்றன. பெரும்பாலான வங்கிகள் நாள் கணக்கில் வட்டியைக் கணக்கிட்டு அளிக்கின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது சில நிறுவனங்கள் இடையில் வெளியேற விடுவதில்லை. சில தனியார் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் இடையில் வெளியேறும் போது 1 முதல் 3 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
தங்க கட்டிகள் அல்லது நாணயங்கள்
தங்க கட்டிகள் அல்லது நாணயங்களை ஏமார்ந்து வாங்கும் போது உடனே விற்பது சரியான முடிவு கிடையாது. சந்தை விலையினை விட 5 அல்லது 10 சதவீதம் குறைவான தொகையினைத் தான் நகை கடைக்காரர்கள் அளிப்பார்கள். இல்லை என்றால் அதனை உருக்கி ஆபரண நகைகளாக மற்றி பின்னர் விலை ஏறும் போது விற்கலாம்.
வங்கிகளில் பர்சனல் லோன் எளிதில் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியவை!