இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இதனால் வங்கிகள் வைப்பு மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
வங்கி நிலையான வைப்பு
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வங்கி நிலையான வருடாந்திர வட்டி விகிதங்களை வழங்குகிறது, மேலும் விகிதங்கள் FD காலம் மற்றும் டெபாசிட்டரின் வயதின் அடிப்படையில் மாறுபடும்.
தற்போது, HDFC வங்கி பொது மக்களுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களையும், மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேல்) 7.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. PNB பொது மக்களுக்கு 7.25 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவிகிதம் வரை வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி பொது மக்களுக்கு 7 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வரை வழங்குகிறது.
பந்தன் வங்கி, பிப்ரவரி 7, திங்கட்கிழமை, முதிர்வு காலத்தின் அடிப்படையில் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 25-50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது.
திருத்தப்பட்ட FD விகிதங்கள் ரூ. 2 கோடி வரையிலான சில்லறை டெபாசிட்டுகளுக்கு பொருந்தும், மேலும் பிப்ரவரி 6 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, பொது மக்களுக்கு 8 சதவீதம் வரை FD வட்டி விகிதங்களையும், மூத்தவர்களுக்கு 8.5 சதவீதம் வரையும் வட்டி கிடைக்கிறது.
சிறு சேமிப்பு திட்டங்கள்
சிறு சேமிப்பு திட்டங்களை பொறுத்தவரை பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
அந்த வகையில்,
1) ஓராண்டு கால டெபாசிட் 6.5 சதவீதம்
2) இரு ஆண்டு கால டெபாசிட் 6.8 சதவீதம்
3) மூன்று ஆண்டுகால டெபாசிட் 6.9 சதவீதம்
4) ஐந்து ஆண்டுகால டெபாசிட் 7 சதவீதம்
5) தேசிய சேமிப்பு சான்றிதழ் 7 சதவீதம்
6) கிசான் விகாஸ் பத்ரா 7.2 சதவீதம்
7) சுகன்யா சம்மிரிதி (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) 7.6 சதவீதம்
8) மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 8 சதவீதம்
மாதாந்திர வருவாய் திட்டம் 7.1 சதவீதம் ஆகும்.
இந்தத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் வருங்காலங்களில் ரெப்போ விகிதத்தைப் பொறுத்து மாற்றியமைக்கப்படலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/