ஐந்தாண்டு லாக்-இன் காலத்துடன் கூடிய தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) ஆகியவை வருமான வரிச் சலுகைகளுடன் கூடிய கடன் கருவிகளாகும்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, தேசிய சேமிப்பு சான்றிதழ் முதலீட்டுக்கு 7.7 சதவீத வட்டி கிடைக்கிறது.
அதேநேரம் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் 3% முதல் 7.10% வரை வாடிக்கையாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
தொடர்ந்து, 7 நாள்களில் இருந்து பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு, HDFC வங்கி இந்த வைப்புகளுக்கு 3% முதல் 7.25% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது நிலையான வருமானம் கொண்ட அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டமாகும்.
குறைந்தப்பட்சம் ரூ.1000ம் செலுத்தி ரூ.100ன் மடங்குகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். அதிகப்பட்ச முதலீட்டுக்கு வயது வரம்பு இல்லை.
ஃபிக்ஸட் டெபாசிட்
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை கிடைக்கிறது. இதில் 5 ஆண்டு திட்டங்களில் 80சி வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.150000 லட்சம் முதலீட்டுக்கு வருமான வரி விலக்கு உண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“