Advertisment

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் vs தேசிய சேமிப்பு சான்றிதழ்: எந்த முதலீட்டில் அதிக வருவாய் கிடைக்கும்?

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
HDFC Banks special FD for senior citizens with higher interest rate will end soon

இண்டஸ்இந்த் வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட் (FD) விகிதங்கள் ஆக.5 முதல் அமலுக்குவந்துள்ளன.

ஐந்தாண்டு லாக்-இன் காலத்துடன் கூடிய தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) ஆகியவை வருமான வரிச் சலுகைகளுடன் கூடிய கடன் கருவிகளாகும்.

ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, தேசிய சேமிப்பு சான்றிதழ் முதலீட்டுக்கு 7.7 சதவீத வட்டி கிடைக்கிறது.

Advertisment

அதேநேரம் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் 3% முதல் 7.10% வரை வாடிக்கையாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

தொடர்ந்து, 7 நாள்களில் இருந்து பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு, HDFC வங்கி இந்த வைப்புகளுக்கு 3% முதல் 7.25% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

தேசிய சேமிப்பு சான்றிதழ்

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது நிலையான வருமானம் கொண்ட அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டமாகும்.

குறைந்தப்பட்சம் ரூ.1000ம் செலுத்தி ரூ.100ன் மடங்குகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். அதிகப்பட்ச முதலீட்டுக்கு வயது வரம்பு இல்லை.

ஃபிக்ஸட் டெபாசிட்

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை கிடைக்கிறது. இதில் 5 ஆண்டு திட்டங்களில் 80சி வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.150000 லட்சம் முதலீட்டுக்கு வருமான வரி விலக்கு உண்டு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Post Office Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment