fixed-deposits | sbi pnb and bob | அனைத்து வயதினரின் முதலீடுக்கும் ஏற்றதாக ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளது. இதற்கிடையில் தற்போது சில பொதுத்துறை வங்கிகள் வட்டியை உயர்த்தி உள்ளன.
அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
பாங்க் ஆஃப் இந்தியா
பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான FDக்கு, பொது வாடிக்கையாளர்கள் 1 வருட FDக்கு 6.75 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. தொடர்ந்து, மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்குகிறது.
இது தவிர, எஸ்பிஐயில் ஓராண்டுக்கு நிரந்தர வைப்புத் தொகை செய்தால், 5.75 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீத வட்டி வழங்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட நிலையான வைப்புகளுக்கு 6.75 சதவீத வட்டியை வழங்குகிறது. இது தவிர மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் நவ.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பான முதலீடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“