கடன், தவணை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளின் இந்த முக்கிய ‘அப்டேட்’ தெரிஞ்சுகோங்க!

SBI News In Tamil: CVV, PIN, அல்லது OTP ஆகியவற்றை மோசடிகாரர்களிடம் தெரிவித்து விட்டால் இது தொடர்பாக உடனடியாக வங்கியை தெரியபடுத்த வேண்டும்.

By: May 7, 2020, 8:03:14 AM

Bank EMI moratorium scam: ஊரடங்கு காலத்தில் உங்கள் கடன் தவனை செலுத்துவதை ஒத்திவைக்க முயற்சி செய்கிறீர்களா. ஆம் எனில், நீங்கள் இணைய குற்றவாளிகளிடமிருந்து அச்சுறுத்தலைத் தவிர்க்கலாம். கரோனா வைரஸ் தகவல்களின் மூலம் தங்களது கடன் தவனை செலுத்துவதை தள்ளி வைக்க நினைக்கும் மக்களை பயன்படுத்த பல மோசடிகாரர்கள் முயற்சிக்கின்றனர், என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு மக்கள் எந்த கடன் தவனைகளையும் கட்ட வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India RBI) அனுமதித்திருந்தது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய நாடுதழுவிய ஊரடங்கில் இருக்கும் இந்த நேரத்தில் மக்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை

இது போன்ற கடன் தவனை ஒத்தி வைப்பு மோசடி தொடர்பாக ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உட்பட பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளார்களுக்கு இப்போது எச்சரிக்கை செய்கிறார்கள். வாடிக்கையாளர்களின் கடன் தவனையை தள்ளி வைக்க தாங்கள் உதவுவதாக கூறி, மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களைப் பெற முயற்சிக்கின்றனர் மேலும் OTP மற்றும் பிற கடவுச்சொற்களையும் கேட்கின்றனர். பல வாடிக்கையாளர்களுக்கு ஒரு கால் சென்டரில் இருந்து உதவுவதாக கூறி மோசடி தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வழைப்புகள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை பகிரச் சொல்வதாகவும் ’Netrika Consulting’ ன், இணைய பாதுகாப்பு (Cybersecurity) இயக்குநர் ராஜேஷ் குமார், கூறியுள்ளார்.

எந்த வங்கியும் வாடிக்கையாளரை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களது வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்செற்கள், PIN மற்றும் OTP ஆகியவற்றை கேட்காது என்பது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், என குமார் மேலும் தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும்.

மோசடிகாரர்களிடமிருந்து வங்கி வாடிக்கையாளருக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் அந்த நபர் என்ன செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தவறுதலாக தங்களது கடவுச் சொல், CVV, PIN, அல்லது OTP ஆகியவற்றை மோசடிகாரர்களிடம் தெரிவித்து விட்டால் இது தொடர்பாக உடனடியாக வங்கியை தெரியபடுத்த வேண்டும். மேலும் தங்களது வங்கி கணக்கில் அனைத்து பரிவர்த்தனைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்கவும் கேட்டுக் கொள்ள வேண்டும். காவல்துறை இணைய குற்ற தடுப்பு பிரிவிலும் (cyber cell) உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bank fraud fraud calls rbi moratorium icici axis bank credentials

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X