தேசிய விடுமுறைகள், வார விடுமுறைகள்,பிராந்திய விடுமுறைகள் போன்ற பல்வேறு வகையான விடுமுறைகளை கணக்கெடுத்து பார்த்தோமென்றால், வரும் மார்ச் மாதத்தில் மட்டும் குறைந்தது 13 நாட்கள் இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான வங்கிகள் மூடப்படுகின்றன.
மார்ச் மாதம் வங்கி விடுமுறை பட்டியல்:
01 மார்ச் 2020 — வார விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை )
08 மார்ச் 2020 — வார விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை )
10 மார்ச் 2020 — ஹோலி பண்டிகை (செவ்வாய்க்கிழமை )
14 மார்ச் 2020 — இரண்டாவது சனிக்கிழமை
15 மார்ச் 2020 — வார விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை )
22 மார்ச் 2020 — வார விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை )
28 மார்ச் 2020 — நான்கவாது சனிக்கிழமை
29 மார்ச் 2020 — வார விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை )
06 மார்ச் 2020 — சாப்சார் குட் (வெள்ளிக்கிழமை )
09 மார்ச் 2020 — ஹோலிகா தகனம் / டோல் பூர்ணிமா / ஹோலி/ ஹஜ்ரத் அலி பிறந்தநாள் (திங்கட்கிழமை)
11 மார்ச் 2020 — ஹோலி (புதன்கிழமை )
25 மார்ச் 2020 — குடி பட்வா (மராத்திய புத்தாண்டு) / உகாடி (தெலுங்கு மற்றும் கனடா மக்களின் புத்தாண்டு ) / முதல் நவராத்திரி (புதன்கிழமை )
27 மார்ச் 2020 — சர்ஹுல் (வெளிக்கிழமை )
மார்ச் மாதத்தில் மட்டும் எட்டு தேசிய விடுமுறைகள். இதனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 10 ஆம் தேதியில் கொண்டாப்படும் ஹோலி பண்டிகை , இந்தியா முழூக்க கொண்டாடப்படுவதால், அதை அனுசரிக்க பெரும்பாலான வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 9 ஆம் தேதி : ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை .
மார்ச் 11 ஆம் தேதி: பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
மார்ச் 25 ஆம் தேதி : ஆந்திரா, கர்நாடகா, லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், தமிழ்நாடு, தெலுங்கானா, கோவா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய வங்கிகளுக்கு விடுமுறை.
மார்ச் 27 ஆம் தேதி: சர்ஹுல் விழாவினை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
மார்ச் 6 ஆம் தேதி: மிசோரம் மாநிலத்தின் அய்சால் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.