மாநில அளவிலான பண்டிகைகள், பொது விடுமுறை, வார விடுமுறை என தொடர்ந்து வருவதால் இந்த வாரம் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும் சூழல் உள்ளது. செப்டம்பர் 13-18 வரையில் இந்த தொடர் விடுமுறை வருகிறது. எனினும் எல்லா பண்டிகைகளும் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதில்லை என்பதால் வங்கி செயல்பாடுகள் மாறுபடலாம். உங்கள் ஊர் வங்கி கிளையை அணுகி அல்லது வங்கி செயலியில் உங்கள் வங்கி விடுமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
இருப்பினும் ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும் செப்டம்பர் 2024-ல் குறைந்தது 14 நாட்களுக்கு மூடப்படும்.
செப்டம்பர் 13- ராம்தேவ் ஜெயந்தி - ராஜஸ்தான்
செப்டம்பர் 14 - இரண்டாவது சனிக்கிழமை - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 15 - ஞாயிறு திருவோணம் - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 16 - ஈத்-இ-மிலாத் (திங்கட்கிழமை) - இந்தியா முழுவதும்
செப்டம்பர் 17 - இந்திர ஜாத்ரா (செவ்வாய்) - சிக்கிம்
செப்டம்பர் 18 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (புதன்கிழமை) - கேரளா
இதே போன்று அடுத்த வாரமும் செப்டம்பர் 21-23 வரை தொடர் விடுமுறை வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“