ஏப்ரல் மாதத்தில் சில மாநிலங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். வாடிக்கையாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்.
ஏனெனில் வங்கி விடுமுறைகள் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே தவறான புரிதலையும் தவிர்க்க வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறையை அறிந்துக்கொள்வது அவசியம்.
3 நாள்கள் தொடர் விடுப்பு
இந்த வாரத்தில் ஏப்.7ஆம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆகும். தொடர்ந்து, ஏப்.8 சனி, ஏப்.9 ஞாயிறு வங்கி விடுமுறை ஆகும்.
ஏப்ரலில் வங்கி விடுமுறை
ஏப்.1 நிதியாண்டு கணக்கு தொடக்கம்
ஏப்.4 மகாவீரர் ஜெயந்தி (குஜராத், தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் விடுமுறை )
ஏப்.5. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாள் (ஹைதராபாத்)
ஏப்.7 புனித வெள்ளி
ஏப்.14 அம்பேத்கர் பிறந்தநாள் | தமிழ் புத்தாண்டு
ஏப்.15 கேரள புத்தாண்டு
ஏப்.18 ஷாப்-ஐ-குதார்
ஏப்.21 ரம்ஜான்
ஏப்.22 ரம்ஜான்
வங்கி பொதுவிடுமுறை
இந்த விடுமுறை தினங்கள் தவிர இரண்டாம் சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை ஆகும். எனினும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“