holiday | Bank News | இந்திய ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியலின்படி, ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உள்பட மொத்தம் 14 நாட்கள் பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இந்தச் சிரமத்தையும் தவிர்க்க அந்த விடுமுறை நாள்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது அவசியம். இது, பணப் பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்லுதல், காசோலையை டெபாசிட் செய்தல் போன்ற வேலைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறை தினங்கள்
- ஏப்.1 மிசோரம், சண்டிகர், சிக்கிம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயாவைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் தங்கள் வருடாந்திரக் கணக்குகளை மூடுவதற்கு மூடப்படும்.
- ஏப்.5 ஹைதராபாத் - தெலுங்கானா, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்/ஜுமாத்-உல்-விடா தினங்களுக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஏப்.9 மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஹைதராபாத் - ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத் - தெலுங்கானா, மணிப்பூர், கோவா, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் குடி பத்வா/உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு தினம்/சஜிபு நோங்மபான்பா (செய்ரோபா)/1வது நவராத்ராவுக்கு வங்கிகள் மூடப்படும்.
- ஏப்.10 கேரளாவில் ரம்ஜான்-ஐத் (Id-Ul-Fitr)க்காக வங்கிகள் மூடப்படும்.
- ஏப்.11 சண்டிகர், சிக்கிம், கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் ரம்ஜான்-ஐத் (ஈத்-உல்-பித்ர்) (1வது ஷவ்வால்) க்காக வங்கிகள் மூடப்படும்.
- ஏப்.13 திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் போஹாக் பிஹு/செய்ரோபா/பைசாகி/பிஜு பண்டிகைக்காக வங்கிகள் மூடப்படும்.
- ஏப்.15 அஸ்ஸாம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினத்திற்காக வங்கிகள் மூடப்படும்.
- ஏப்.16 குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஸ்ரீராம நவமிக்கு (சாய்ட் தாசைன்) வங்கிகள் மூடப்படும்.
- ஏப்.20 திரிபுராவில் கரியா பூஜைக்காக வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 2024க்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் உங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"