bank-strike | central-bank-of-india | sbi-bank | canara-bank | Bank Holidays in December 2023 : வரும் டிசம்பர் மாதத்தில் 18 நாள்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனால் வங்கி வேலைகளை குறிப்பிட்ட தினங்களுக்குள் முடிப்பது நல்லது. எனினும், அனைத்து நாட்களிலும் இணைய வங்கி சேவைகள் நாடு முழுவதும் அணுகக்கூடியதாக இருக்கும்.
மேலும், அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) டிசம்பரில் 6 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் வங்கி விடுமுறை நாள்களை பார்க்கலாம்.
எண் | தேதி | காரணம் |
01 | 1 டிசம்பர் 2023 | அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தில் மாநில உதய தின விழாவையொட்டி அம்மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை |
02 | 3 டிசம்பர் 2023 | முதல் ஞாயிறு |
03 | 4 டிசம்பர் 2023 | புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா காரணமாக கோவாவில் வங்கிகள் மூடப்படும் |
04 | 9 டிசம்பர் 2023 | மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
05 | 10 டிசம்பர் 2023 | ஞாயிற்றுக்கிழமை விடுமுறை |
06 | 12 டிசம்பர் 2023 | பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா காரணமாக மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை |
07 | 13 டிசம்பர் 2023 | லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை |
08 | 14 டிசம்பர் 2023 | லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை |
09 | 17 டிசம்பர் 2023 | ஞாயிற்றுக்கிழமை விடுமுறை |
10 | 18 டிசம்பர் 2023 | உ சோசோ தாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை |
11 | 19 டிசம்பர் 2023 | கோவாவில் விடுதலை தினத்தையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை |
12 | 23 டிசம்பர் 2023 | மாதத்தின் நான்காவது சனிக்கிழமை, நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை |
13 | 24 டிசம்பர் 2023 | ஞாயிற்றுக்கிழமை விடுமுறை |
14 | 25 டிசம்பர் 2023 | கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை |
15 | 26 டிசம்பர் 2023 | கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் காரணமாக மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது |
16 | 27 டிசம்பர் 2023 | கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகாலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை |
17 | 30 டிசம்பர் 2023 | உ கியாங் நங்பாவைக் கருத்தில் கொண்டு மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது |
18 | 31 டிசம்பர் 2023 | ஞாயிற்றுக்கிழமை விடுமுறை |
வார இறுதி நாட்கள் மற்றும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினங்கள்
எண் | தேதி | காரணம் |
01 | டிசம்பர் 3 | ஞாயிறு |
02 | டிசம்பர் 9 | 2ம் சனிக்கிழமை |
03 | டிசம்பர் 10 | ஞாயிறு |
04 | டிசம்பர் 17 | ஞாயிறு |
05 | டிசம்பர் 23 | 4ம் சனிக்கிழமை |
06 | டிசம்பர் 24 | ஞாயிறு |
07 | டிசம்பர் 31 | ஞாயிறு |
வங்கிகள் ஸ்டிரைக்
எண் | தேதி | வங்கிகள் |
01 | டிசம்பர் 4 2023 | பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, ஸ்டே்ட் பேங்க் ஆஃப் இந்தியா |
02 | டிசம்பர் 5 2023 | பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா |
03 | டிசம்பர் 6 2023 | கனரா வங்கி, சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா |
04 | டிசம்பர் 7 2023 | இந்தியன் வங்கி, யூகோ வங்கி |
05 | டிசம்பர் 8 2023 | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா |
06 | டிசம்பர் 11 2023 | அனைத்து தனியார் வங்கிகள் |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.