Bank Holidays February 2023: நடப்பாண்டின் 2ஆவது மாதமான பிப்ரவரியில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை ஆகும். 2023 ஜனவரியில் கிட்டத்தட்ட 15 நாள்கள் வங்கி விடுமுறையைத் தொடர்ந்து பிப்ரவரியில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 10 வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் மாதத்தில் ஹஸ்ரத் அலி ஜெயந்தி, குரு ரவிதாஸ் ஜெயந்தி, லுய்-ங்காய்-நி, மஹா சிவராத்திரி, லோசர் என பல்வேறு முக்கியமான பண்டிகைகள் வருகின்றன. அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 10 தேசிய மற்றும் உள்ளூர் வங்கி விடுமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அனைத்து இந்திய வங்கிகளும், பொது மற்றும் தனியார், வார இறுதி நாட்கள் உட்பட குறிப்பிட்ட நாட்களில் மூடப்படும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்போது, பிப்ரவரி 2023 மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்களின் விரிவான பட்டியலை பார்க்கலாம்.
- பிப்ரவரி 5: ஹஸ்ரத் அலி ஜெயந்தி, குரு ரவிதாஸ் ஜெயந்தி (ஞாயிறு)
- பிப்ரவரி 11: இரண்டாவது சனிக்கிழமை
- பிப்ரவரி 12: ஞாயிறு
- பிப்ரவரி 15: (லுய்-ங்காய்-நி) Lui-Ngai-Ni (மணிப்பூர்)
- பிப்ரவரி 18: மகா சிவராத்திரி
- பிப்ரவரி 19: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)
- பிப்ரவரி 20: மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம்)
- பிப்ரவரி 21: லோசார் (சிக்கிம்)
- பிப்ரவரி 25: நான்காவது சனிக்கிழமை
- பிப்ரவரி 26: ஞாயிறு
ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/