Bank holidays in November 2023: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை காலண்டர் வழிகாட்டுதல்களின்படி, இந்தியாவில் உள்ள வங்கிகள் நவம்பர் மாதம் பதினைந்து நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும். இந்த 15 நாட்கள் விடுமுறையானது இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறைகளை உள்ளடக்கும்.
மேலும், இந்த வங்கி விடுமுறைகளில் சில பிராந்தியமானவை. எனவே அவை குறிப்பிட்ட பகுதியில் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் வங்கிக்கு வங்கி வேறுபடும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி இந்தியாவில் மூன்று வகையான வங்கி விடுமுறைகள் உள்ளன.
எனவே வாடிக்கையாளர்கள் கடைசி நிமிட சிரமத்தைத் தவிர்க்க, பின்வரும் நாள்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நவம்பர் 2023 வங்கி விடுமுறை தினங்கள்
- 1 நவம்பர் (புதன்கிழமை): கர்நாடகா, மணிப்பூர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கன்னட ராஜ்யோத்சவா/கர்வா சவுத் விழாவையொட்டி வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- நவம்பர் 5: ஞாயிறு
- நவம்பர் 10 (வெள்ளிக்கிழமை): மேகாலயாவில் வாங்கலா திருவிழா காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 11 நவம்பர்: இரண்டாவது சனிக்கிழமை
- 12 நவம்பர்: ஞாயிறு
- 13 நவம்பர் (திங்கள்கிழமை): கோவர்தன் பூஜை/லக்ஷ்மி பூஜை (தீபாவளி)/தீபாவளி காரணமாக திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 14 நவம்பர் (செவ்வாய்கிழமை): குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தீபாவளி (பாலி பிரதிபதா)/தீபாவளி/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/லக்ஷ்மி பூஜையின் போது வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 15 நவம்பர் (புதன்கிழமை): சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி/லட்சுமி பூஜை (தீபாவளி)/நிங்கோல் சக்கௌபா/பிராத்ரித்விதியா ஆகிய காரணங்களால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 19 நவம்பர்: ஞாயிறு
- 20 நவம்பர் (திங்கள்கிழமை): சாத் (காலை அர்க்யா), பீகார் மற்றும் ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 23 நவம்பர் (செவ்வாய்கிழமை): செங் குட்ஸ்னெம்/எகாஸ்-பக்வால் கொண்டாட்டத்தின் காரணமாக உத்தரகாண்ட் மற்றும் சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
- 25 நவம்பர்: நான்காவது சனிக்கிழமை
- 27 நவம்பர் (திங்கள்கிழமை): குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமாவையொட்டி, திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகண்ட், ஹைதராபாத், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், வங்காளம், மகாராஷ்டிரா, புது டெல்லி, பீகார், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ,
- நவம்பர் 26: ஞாயிறு
- 30 நவம்பர் (வியாழன்): கனகதாச ஜெயந்தி அன்று, கர்நாடகாவில் வங்கிகள் மூடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“