/tamil-ie/media/media_files/uploads/2022/09/bank-jobs.jpg)
விடுமுறை நாள்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும்.
Bank Holidays in October 2023: அக்டோபர் மாதத்தில், தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள் காரணமாக மொத்தம் 16 நாள்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதில், துர்கா பூஜை முதல் தசரா வரை வருகிறது.
சில மாநிலங்களில், வங்கிகள் ஸ்ரீ மஹாலயா, கடி பிஹு மற்றும் லக்ஷ்மி பூஜையைக் கடைப்பிடிக்கும். மற்ற விடுமுறை நாள்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும்.
தேதி | நாள் | விடுமுறை | மாநிலம் |
அக்டோபர் 1 | ஞாயிறு | வார விடுமுறை | நாடு முழுக்க |
அக்டோபர் 2 | திங்கள் | காந்தி ஜெயந்தி | நாடு முழுக்க |
அக்டோபர் 8 | ஞாயிறு | வார விடுமுறை | நாடு முழுக்க |
அக்டோபர் 14 | சனிக்கிழமை | மகாளய மற்றும் இரண்டாம் சனிக்கிழமை | மேற்கு வங்காளம் |
அக்டோபர் 15 | ஞாயிறு | வார விடுமுறை | நாடு முழுக்க |
அக்டோபர் 18 | புதன் | கட்டி பிகு | அஸ்ஸலாம் |
அக்டோபர் 21 | சனிக்கிழமை | துர்கா பூஜை | திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளம் |
அக்டோபர் 22 | ஞாயிறு | வார விடுமுறை | நாடு முழுக்க |
அக்டோபர் 23 | திங்கள் | தசரா மகா நவமி விஜயதசமி ஆயுதபூஜை | திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, அஸ்ஸாம், கேரளா, நாகாலாந்து, பிகார், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் |
அக்டோபர் 24 | செவ்வாய் | தசரா விஜயதசமி துர்கா பூஜை | ஆந்திரா, மணிப்பூர் நீங்கலாக மற்ற மாநிலங்கள் |
அக்டோபர் 25 | புதன் | துர்கா பூஜை, தாஷியன் | சிக்கிம் |
அக்டோபர் 26 | வியாழன் | துர்கா பூஜை | சிக்கிம் ஜம்மு அண்ட் காஷ்மீர் |
அக்டோபர் 27 | வெள்ளிக்கிழமை | துர்கா பூஜை | சிக்கிம் |
அக்டோபர் 28 | சனிக்கிழமை | லட்சுமி பூஜை 4ம் சனிக்கிழமை | மேற்கு வங்காளம் |
அக்டோபர் 29 | ஞாயிறு | வார விடுமுறை | நாடு முழுக்க |
அக்டோபர் 31 | செவ்வாய் | சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் | குஜராத் |
பொதுவாக, ரிசர்வ் வங்கியால் விடுமுறைகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை ஆணையமான இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆண்டு முழுவதும் வங்கி விடுமுறை காலண்டரை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.