சொந்த வீடா? வாடகை வீடா? இந்த கேள்வியை எதிர்க் கொள்ளாத மனிதர்களே இல்லை. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் வீடு கட்டிய அனைவருக்கும் தெரியும்.
பெரிய குடும்பம் தொடங்கி நடுத்தர குடும்பங்கள் வரை பலரின் கனவும் சொந்த வீடு தான். அதுவும் சென்னையில் சொந்த வீடு வாங்குபவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அப்படி கடன் வாங்கி, வீடு கட்டிய பிறகு அந்த கடனை அடைப்பது அதற்கு மேல் இருக்கும் சவால்கள். இன்றைய காலக்கட்டத்தில் வீடுக்கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தவர்கள் முதலில் நாடி செல்வது வங்கிகளை தான்.
வங்கிகள் அளிக்கும் ஹோம்லோன் வசதி பலருக்கும் எளிமையான ஒன்று. அப்படி கடன் வாங்கி வீடுக்கட்டிய பிறகு வீட்டுக்கடனை அடைக்கும் வரை உயிர் போய் உயிர் வரும். ஒரு தவணையை சரியாக கட்டமுடியவில்லை என்றால் உடனே வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வந்து விடுவார்கள்.
அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பொறுமையான நின்று நாம் பதில் சொல்ல வேண்டும். உண்மையில் வீட்டுக்கடன் அளித்த பிறகு வங்கிகள் உங்களிடம் என்னென்ன கேள்விகள் எழுப்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
bank home loan tips :
1. முதலில் வீட்டு கடன் தொடர்ந்து 6 மாதங்கள் செலுத்தாமல் இருந்தால், வங்கிகள் கூடுதலாக இரண்டு மாதங்கள் அளித்துக் கடனை திருப்பிச் செலுத்த கோரிக்கை வைக்கும். அதனையும் செய்யத் தவறும் போது அந்தக் கடனை வாரா கடன் பட்டியலுக்குக் கொண்டு செல்வார்கள்.
2. வங்கிகள் பெரும்பாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குச் செல்லும் முன்பு எப்படியாவது கடன் தொகையினை வசூலிக்க முடியாமா என்பதில் தான் குறியாக இருப்பார்கள்.
3. வங்கிகள் எந்த காரணத்திற்காகவும் நீங்கள் வாங்கிய கடன் பற்றி மூன்றாம் நபர்களிடம் பகிரக்கூடாது. மூன்றாம் நபர்களிடம் தெரிவித்து இருந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உங்களுக்கு உரிமம் உண்டு.
4. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் மட்டுமே வாடிக்கையாளர்களைக் கடன் வசூலிக்கும் அதிகாரிகள் அணுக வேண்டும்
5. பணத்தினை வசூலிக்க வரும் அதிகாரிகள் கடன் வாங்கியவர்களிடம் கெளரவமாக மற்றும் நாகரீகமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பது சட்டத்தில் இருக்கும் விதி
6. கடன் பெற்றவரின் நிலை மிக மோசமாக இருந்து ஒரு சிறிய அளவிலான தொகை அதாவது கடனின் முதன்மை தொகையில் 90 சதவீதத்தினைச் செலுத்தினால் 100 சதவீத வட்டி விகித தள்ளுபடி பெற முடியும்