bank loan sbi bank loan sbi bank: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் செயலியான யோனோ (Yono) மூலம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும்போதுதான் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
Advertisment
எஸ்பிஐ படி, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சிபில் மதிப்பெண் (CIBIL scores) அடிப்படையில் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால் ரூ .75 லட்சத்துக்கும் அதிகமான வீட்டுக் கடனுக்கான வட்டியில் 0.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இதுகுறித்து எஸ்பிஐ கூறுகையில், அதன் பண்டிகை சலுகையின் ஒரு பகுதியாக, ரூ .30 லட்சத்துக்கும் அதிகமான மற்றும் இரண்டு கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனில் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதத்தில் 0.20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். முன்பு இந்த தள்ளுபடி 0.10 சதவீதமாக இருந்தது. இந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
SBI வங்கி தற்போது ரூ .30 லட்சம் வரை 6.90 சதவீதம் என குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. ரூ .30 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகும்.
.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”