மத்திய அரசு வங்கிகள் இணைப்பை மிகப்பெரிய பொருளாதார முன்னெடுப்பாக கருதுகிறது. நலிவடைந்த வங்கிகளை இணைப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்றும் கருதுகிறது. பத்து பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிளாக மாற்றும் நடைமுறையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தார்.
விஜயா வங்கி, கார்ப்ரேசன் வங்கி, ஆந்த்ரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய 8 வங்கிகளுக்கான இணைப்பு இந்த நிதியாண்டின் முதல் நாளான ஏப்ரல் 1ம் தேதி தொடங்கிறது.
கார்ப்ரேசன் வங்கி, ஆந்த்ரா வங்கி இரு வங்கிகளையும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்படுகிறது.
சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படுகிறது.
ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா இரு வங்கிகளையும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியுடன் இணைக்கப்படுகிறது.
அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படுகிறது.
விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி கடந்த ஆண்டு பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கப்பட்டது.
இவ்வாறு இணைக்கப்பட்ட பின், வங்கிகளைப் பொறுத்து, வங்கி கணக்கு எண், செக் புக், ஏடிஎம் கார்டு, IFSC, MICR போன்றவற்றின் நடைமுறைகள் மாறலாம்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இணைக்கப்பட்ட பழைய வங்கிகளின் செக் புக் செல்லாது. புதிய வங்கியின் செக் புக்கை வாங்கி பயன்ப்படுத்திக் கொள்ளவும்.
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில வங்கிகளுக்கு IFSC, MICR போன்ற கோடுகளும் மாற உள்ளன.
வங்கிகள் இணைப்பின் போது ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு நடைமுறை பின்பற்றபடுகிறது. அதன்படி கடன்களுக்கான ECS நடைமுறை, காப்பீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்றவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்கள் பழைய வங்கியிடமிருந்து நீங்கள் கடன் பெற்றிருந்தால் புதிய வங்கி கடனை திருப்பி செலுத்தும் நடைமுறையை தொடர்ந்து செயல்படுத்தும்.
சில வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கலாம். அதனை முன்கூட்டியே உங்கள் பழைய வங்கி தெரிவிக்கும். இல்லையென்றால் வங்கியில் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளை பொறுத்தவரை வட்டி விகிதங்களில் இடைநிலையில் மாற்றம் இருக்காது. ஆனால் புதுப்பிக்கும்போது, புதிய வங்கிக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறலாம்.
ஏடிஎம் கார்டை பொறுத்தவரை பழைய அட்டைகளையே காலாவதியாகும் வரை பயன்படுத்தலாம். அதன் பின் புதிய வங்கியின் அட்டை உங்களுக்கு வழங்கப்படும்.
இந்த இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தினாலும் தவிர்க்க முடியாது. மேலும் வங்கிகளை நம்பி இருக்காமல் உங்கள் அக்கவுண்ட் பற்றிய தகவல்களை நீங்களாக கேட்டு தெரிந்துக் கொள்வது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil