bank money investment bank account : ஃபிக்சட் டெபாசிட்.. லாபம் தரும் மிகச் சிறந்த முதலீடு. ஆனால் பலருக்கும் பயம் எப்படி முதலீடு செய்வது? நம்பலாமா? எந்த வங்கி சிறந்தது? இப்படியான கேள்விகள் பல எழும்பும். சரி விடுங்க நீங்க சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அக்கவுண்டே ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்டா மாறினால்? எப்படினு யோசிக்கிரீர்களா? எஸ்பிஐ -யில் அந்த வசதி இருக்கு தெரியுமா?
Advertisment
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்பிஐ சேமிப்பு பிள்ஸ் (Savings Plus) என்ற கணக்கை வழங்குகிறது. இந்த வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் பணம் தானாகவே நிரந்தர வைப்பாக (fixed deposits FD) மாறிவிடும், மேலும் எஸ்பிஐ நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம், வைப்புக்கு கிடைக்கும்.
எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு குறித்த விவரங்கள், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான onlinesbi.com மற்றும் sbi.co.in ஆகியவற்றில் கிடைக்கும்.
எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் ரூபாய் 25,000/- க்கு அதிகமாக உள்ள ஒருவருடைய வைப்பு தானாக எஸ்பிஐ நிரந்தர வைப்பாக (எப்டி) மாறிவிடும். இதற்கு எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ரூபாய் 35,000/- ஆக இருக்க வேண்டும். அப்படியென்றால் ஆரம்ப குறைந்தபட்ச உபரி தொகை ரூபாய் 10,000 ஆக இருக்க வேண்டும், அது தானாக எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும். அதிலிருந்து கூடுதல் ரூபாய் 1,000/- எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும்.
எடுத்துக்காட்டாக உங்கள் எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் வங்கி கணக்கில் ரூபாய் 35,000/- இருக்கிறதென்றால், ரூபாய் 10,000/- தானாக எப்டி ஆக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் ரூபாய் 1,500/- ஐ உங்கள் எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் செலுத்தினால், ரூபாய் 1,000/- எஸ்பிஐ எப்டி’யில் சேர்ந்துவிடும். மீதம் உள்ள ரூபாய் 500/- உங்கள் சேமிப்பு கணக்கிலேயே இருக்கும்.
எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கிற்கும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி வசதி, கைபேசி வங்கி வசதி, ஏடிஎம் அட்டை மற்றும் குறுஞ்செய்தி அலேர்ட் ஆகிய வசதிகளைப் பெறுவார்கள்.எனவே நீங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைப்பு மூலம் அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைத்தால் எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு ஒரு நல்ல தேர்வு.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”