Bank NBFC shares fall | reserve-bank-of-india | நுகர்வோர் கடனுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியதை அடுத்து, கடும் விற்பனை அழுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் வங்கி மற்றும் என்பிஎஃப்சி (NBFC) நிறுவனங்களின் பங்குகள் 7 சதவீதம் வரை சரிந்தன.
அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் 3.34 சதவீதம் சரிந்தன. ஆக்சிஸ் வங்கி 3 சதவீதம் சரிந்தது. கனரா வங்கி 2.67 சதவீதம் சரிந்தது. பாங்க் ஆப் பரோடா 2.31 சதவீதம் சரிந்தது.
தொடர்ந்து, பெடரல் வங்கி (1.39 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி வங்கி (1.26 சதவீதம்), ஐசிஐசிஐ வங்கி (1.16 சதவீதம்) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (0.89 சதவீதம்) ஆகியவையும் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) சரிவைச் சந்தித்தன.
இதனால், பிஎஸ்இ பேங்க்எக்ஸ் குறியீடு 1.12 சதவீதம் சரிந்தது. இதற்கிடையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களில், எஸ்பிஐ கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸ் பங்குகள் 6.70 சதவீதமும், உஜ்ஜீவன் பைனான்சியல் சர்வீசஸ் 5 சதவீதமும், அர்மான் பைனான்சியல் சர்வீசஸ் (3.91 சதவீதம்), ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் (3.78 சதவீதம்) பங்குகளும் சரிந்தன.
வியாழக்கிழமை (நவ.16) ரிசர்வ் வங்கி நுகர்வோர் கடனுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது. ஏனெனில் வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகள் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கு அதிக ஆபத்து நிதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டது.
மேலும், பாதுகாப்பற்ற நுகர்வோர் கடன்களின் ஆபத்து நிதி 25 சதவீத புள்ளிகளால் உயர்த்தப்பட்டுள்ளது. தனிநபர் கடன்கள் உட்பட வணிக வங்கிகளின் (நிலுவையில் உள்ளவை மற்றும் புதியவை) நுகர்வோர் கடன் வெளிப்பாடு தொடர்பாக, வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தங்கம் மற்றும் தங்க நகைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட கடன்கள் ஆகியவற்றைத் தவிர்த்து இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“