ஏடிஎம்-களில் அடிக்கடி பணம் எடுப்பவர்களா நீங்கள்? இந்த விஷயம் தெரியுமா?

நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

bank news bank atm
bank news bank atm

bank news bank atm : இன்றைய அவசர உலகில் பெரும்பாலானோர் ஏடிஎம்-களில் பணம் எடுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அப்படி அடிக்கடி தேவைப்படும் போது ஏடிஎம்-களில் பணம் எடுப்பவரா நீங்கள்? இதோ இந்த தகவல் உங்களுக்கு தான்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள், Yono appன் உதவியுடன் இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெற வேண்டும்.லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பெற்ற பின்னர், அதில் லாகின் பண்ண வேண்டும்.இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெற 6 இலக்க MPIN நம்பரை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எல்லா பணபரிவர்த்தனைகளுக்கும் இது முக்கியம் என்பதால், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Yono app லாகின் செய்த பிறகு அதில் Yono cash பகுதிக்கு செல்லவும்.Cardless transaction வசதி உள்ள ஏடிஎம்களுக்கு செல்லவும்.
ஏடிஎம்மில் தேவைப்படும் பணத்தின் மதிப்பை பதிவிடவும்.வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு Yono cash transaction எண் வரும்.இந்த எண், 4 மணிநேரமே செல்லுபடியாகும்.ஏடிஎம்மில், Card-Less Transaction பிரிவை தேர்ந்தெடுத்து, கேட்கும் விபரங்களை பதிவு செய்தால், பணம் பெற்றுக்கொள்ளலாம்.

CICI ATMகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெற வழிமுறை

ICICI வங்கி தனது எல்லா ஏடிஎம்களிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெறும் வழிமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்த சேவைக்காக, ICICI வங்கி, பிரத்யேகமாக ‘iMobile’ app உருவாக்கியுள்ளது.

‘iMobile’ appல் லாகின் செய்து அதில் உள்ள சர்வீசஸ் பிரிவில், ‘Cash Withdrawal at ICICI Bank ATM’ என்பதை தெரிவு செய்யவும்.
பணத்தின் மதிப்பு, அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்டவைகளை தேர்வு செய்தபின்பு, நான்கு இலக்க தற்காலிக பின் நம்பரை உருவாக்கி, பதிவிட்டு சப்மிட் பட்டனை அளிக்கவும்.வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு ( OTP) வரும்.

ICICI ATMக்கு சென்று, Cardless Cash Withdrawal தெரிவு செய்யவும். அதில் மொபைல் எண், குறிப்பிட்ட ஓடிபி எண் பதிவு செய்த பிறகு, தற்காலிக 4 இலக்க பின் நம்பரையும் பதிவிட்டு, பின் amount for withdrawal தெரிவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.ICICI ATMல் cardless transaction மூலமாக, நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bank news bank atm icici bank sbi bank icici atm sbi atm

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com