உஷார் மக்களே… இந்த வங்கியில் பணம் எடுக்க மட்டுமல்ல; போடவும் கட்டணம்!

ஒவ்வொரு வித்ட்ராவலுக்கும் ரூ. 25 வரை கட்டணம் பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சேமிப்புக் கணக்கில் வைக்கப்படும் வரவுக்கு உச்ச வரம்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Bank news cash deposit above Rs 10 thousand: நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி தங்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினாலும், எடுத்தாலும் சேவைக் கட்டணங்கள் பிடிக்கப்படும் என்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தங்களின் வாடிக்கையாளர்களிடம் அறிவித்துள்ளது. இந்த சேவை கட்டணம் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

அடிப்படை சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்க, முதல் நான்கு முறை சேவைக் கட்டணங்கள் இல்லை. அதன் பின்னர் ஒவ்வொரு வித்ட்ராவலுக்கும் ரூ. 25 வரை கட்டணம் பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சேமிப்புக் கணக்கில் வைக்கப்படும் வரவுக்கு உச்ச வரம்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1க்கு ரீசார்ஜ் திட்டம்… ஆக்டிவேட் செய்வதில் ட்விஸ்ட் வைத்த ஜியோ

அடிப்படை இல்லாத இதர சேமிப்புக் கணக்கு மற்றும் கரண்ட் அக்கௌண்டுகளில் இருந்து ரூ. 25000 வரை வித்ட்ரா செய்ய கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் இந்த வரம்பை தாண்டும் போது ரூ. 25 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது. அதே போன்று ரூ. 10 ஆயிரம் வரை வரவு வைக்க கட்டணம் ஏதும் இல்லை. இந்த வரம்பை மீறும் போது ரூ. 25 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உண்மையான கட்டணம் ஜி.எஸ்.டி. அல்லது செஸ் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டோர்ஸ்டெப் வங்கி சேவைக்கான கட்டணங்களிலும் மாற்றங்களை அறிவித்தது இந்த வங்கி. ஒவ்வொரு வங்கி சேவைக்கும் ரூ.20-ஐ சேவைக் கட்டணமாக வசூலித்தது.

ஜூலை 1ம் தேதி முதல் வங்கியில் உள்ள சேமிப்பு தொகைக்கான வட்டியிலும் மாற்றங்களை அறிமுகம் செய்தது. ஒரு லட்சம் வரை வங்கி சேமிப்பு இருக்கும் பட்சத்தில் வட்டியை 2.5% ஆக மாற்றி அறிவித்தது. அதே சமயத்தில் 1 முதல் 2 லட்சம் வரை வங்கி சேமிப்பைக் கொண்டிருக்கும் கணக்குகளுக்கான வட்டித் தொகையில் மாற்றம் ஏதும் இன்று 2.75% ஆக தொடரும் என்றும் அறிவித்திருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bank news cash deposit above rs 10 thousand will not be free in this bank

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express