bank news in tamil bank news tamil : ரூ.5 கோடி வரையில் ஆக்ஸிஸ் வங்கியின் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் 8.4% வட்டி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியின் வைப்பு நிதி திட்டத்தைத் தொடங்கும்போது சிறப்பான வட்டி அளிக்கப்படுகிறது.
Advertisment
ஆக்சிஸ் வங்கியில், இந்திய குடிமக்கள், இந்து கூட்டுக் குடும்பம், கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவை வைப்பு நிதி கணக்கைத் தொடங்கலாம். ஆன்லைனில் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம், குறைந்தபட்சம் ரூ. 5000 முதல் வைப்பு நிதி கணக்கை தொடங்கலாம்.
வங்கி கிளையில் நேரடியாக வைப்பு நிதி கணக்கைத் தொடங்கும்போது குறைந்தபட்சம் ரூ.10,000 க்கு வைப்பு நிதி கணக்கை ஆரம்பிக்க வேண்டும். ஆக்சிஸ் வங்கி, இரண்டு விதமாக வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு வட்டியை வழங்குகிறது.
3.5% முதல் 8.5% வரையான வட்டியை, முதலீடு செய்யும் காலத்தைப் பொறுத்து 5 கோடிக்கு உட்பட்ட வைப்பு நிதி கணக்குளுக்கு வழங்குகின்றது. இதில் தகுதி வாய்ந்த மூத்த குடிமக்களின் முதலீடுகளுக்கும் 8.4% வட்டி கிடைக்கும்.
அதாவது ரூ. 2 கோடி முதல் ரூ. 4.92 கோடி வரை (ஒரு ஆண்டு, 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு 11 நாட்கள் வரை) முதலீடு செய்யும்போதும் ரூ. 4.92 கோடியில் முதல் ரூ. 5 கோடி வரை (17 முதல் 18 மாதங்கள் வரை) முதலீடு செய்யும்போதும் 8.4% வட்டி கிடைக்கும்.
11 மாதங்கள் முதல் குறுகிய கால முதலீடாக (ஒரு ஆண்டு வரை ) ரூ. 5 கோடி வரை முதலீடு செய்தால் 7.5% வட்டி உண்டு. இதில் 7.75% வட்டி மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil