Bank news in Tamil : எச்.டி.எஃப்.சி. வங்கி சில குறிப்பிட்ட பிரிவு வாடிக்கையாளர்களுக்கு, நிலையான வைப்பு நிதிக்கான வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்ததுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. பொதுவாகவே அதிக ரிஸ்க் இல்லாத, பாதுகாப்பான ரிட்டர்ன்ஸுக்கு ஏற்ற சேமிப்பு திட்டமாகவே இந்த எஃப்.டி. முதலீட்டு திட்டம் பார்க்கப்படுகிறது.
எச்.டி.எஃப். சி வங்கியில் எவ்வளவு நாளுக்கு எவ்வளவு வட்டி, எவ்வளவு முதலீட்டிற்கு எவ்வளவு வட்டி? எத்தகைய வாடிக்கையாளர்களுக்கு வட்டி அதிகமாக வழங்கப்படும் என்பது போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்தது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்காக வைக்கப்படும் எஃப்.டி.க்கான வட்டித் தொகை மட்டுமே 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
ஜனவரி 1 முதல் சேவை கட்டணங்கள் உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ICICI
பொதுவாகவே அனைத்து வங்கிகளிலும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது அதிகமாகவே உள்ளது. எச்.டி.எஃப்.சி. வங்கியும் மூத்த குடிமக்களுக்கு எஃப்.டிக்கான வட்டியை அதிகமாகவே வழங்குகிறது.
வட்டி விகிதம் | ||||
முதிர்வு காலம் | வட்டி விகிதம் | மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் | 2 கோடி மற்றும் அதற்கு மேலான முதலீட்டிற்கு | ரூ. கோடி மற்றும் அதற்கு மேலான முதலீட்டிற்கு |
7 - 14 நாட்கள் | 2.50% | 3.00% | 2.50% | 3.00% |
15 - 29 நாட்கள் | 2.50% | 3.00% | 2.50% | 3.00% |
30 - 45 நாட்கள் | 3.00% | 3.50% | 2.75% | 3.25% |
46 - 60 நாட்கள் | 3.00% | 3.50% | 2.75% | 3.25% |
61 - 90 நாட்கள் | 3.00% | 3.50% | 3.00% | 3.50% |
91 நாட்கள் - 6 மாதங்கள் | 3.50% | 4.00% | 3.00% | 3.50% |
6 - 9 மாதங்கள் | 4.40% | 4.90% | 3.50% | 4.00% |
9 மாதங்கள் - 1 வருடம் | 4.40% | 4.90% | 3.65% | 4.15% |
1 வருடம் | 4.90% | 5.40% | 3.75% | 4.25% |
1-2 வருடம் | 5.00% | 5.50% | 3.75% | 4.25% |
2 - 3 வருடங்கள் | 5.15% | 5.65% | 4.40% | 4.90% |
3 - 5 வருடங்கள் | 5.35% | 5.85% | 4.40% | 4.90% |
5 - 10 வருடங்கள் | 5.50% | 6.25%* | 4.40% | 5.15%* |
தேர்வு செய்யப்பட்ட முதிர்ச்சி காலத்திற்கு முன்கூட்டியே கணக்கு மூடப்பட்டால் டெபாசிட் பதிவு செய்யப்பட்ட அசல், ஒப்பந்தம் செய்யப்பட்ட தவணைக்கான விகிதத்தை விட 1% குறைவாக இருக்கும் அல்லது வங்கியில் டெபாசிட் அமலில் உள்ள தவணைக்காலத்திற்கான அடிப்படை விகிதத்தை விட 1% குறைவாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.