Bank news in Tamil: நீங்கள் உங்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் கரண்ட், சேவிங்ஸ் அல்லது சம்பள கணக்கை பல நாட்களாக/ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அந்த கணக்கை உடனே மூடிவிடுவது நல்லது. இல்லையென்றால் அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும் குறிப்பிட்ட சில ஆண்டுகளாக நீங்கள் அந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் கணக்கு செயலற்றதாக மாற்றிவிடப்படும். தேவையற்ற சட்டத்திற்கு புறம்பான பணப்பரிவர்த்தனைகள் உங்கள் கணக்கில் மேற்கொள்வதை தவிர்க்க எஸ்.பி.ஐ வங்கியே இந்த முடிவை எடுக்கிறது.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இழப்புகளை சந்திக்க நேரிடும். நீங்கள் உங்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளுக்கான சேவை கட்டணம், எஸ்.எம்.எஸ். சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதோடு குறைந்தபட்ச பேலன்ஸை தொடர்ந்து மெய்ண்டெய்ன் செய்ய வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் கட்டணம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
எப்படி வங்கிக் கணக்கை “க்ளோஸ்” செய்வது?
டெபிட் கார்டு, செக் புக், பாஸ்புக், அடையாள அட்டை, முகவரி சான்று மற்றும் வங்கிக் கணக்கை மூடுவதற்கான படிவம் ஆகியவற்றை கையில் வைத்திருப்பது நல்லது.
நீங்கள் வங்கிக் கணக்கை க்ளோஸ் செய்வதற்கு முன்பு நிலுவைத் தொகை அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இ.எம்.ஐ. மற்றும் கிரெடிட் கணக்கை மற்றொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் அல்லது அதனையும் க்ளோஸ் செய்ய வேண்டும்.
பேலன்ஸை ஜீரோவாக வைத்திருக்கும் போது பரிவர்த்தனைகளில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. அதே போன்று தேவையான பேங்க் ஸ்டேட்மெண்ட்டுகளையும் நீங்கள் டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த கணக்கை மறுபடியும் ரீ ஓபன் செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
தேவையான ஆவணங்களுடன் நேரில் சென்று தான் கணக்கை மூட இயலும். இதனை நீங்கள் ஆன்லைனில் செய்ய இயலாது. எதற்காக இந்த வங்கியில் இருந்து கணக்கை மூடுகிறீர்கள் என்பதற்கான விளக்கத்தையும் வழங்கி கையோடு செக்புக், பாஸ்புக், டெபிட் கார்டு மற்றும் கணக்கை மூடுவதற்கான சேவைக் கட்டணம் ஆகியவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். இந்த சேவைக் கட்டணம் வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்த காலத்தை பொறுத்து மாறுபடும். வங்கிக் கணக்கை முடிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் எவ்வளவு என்பதை மேலெ தரப்பட்டுள்ள அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.