டெபிட் கார்டை மறந்துட்டீங்களா...? கவலைப்படாதீங்க... ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வழி இருக்கு!

Bank News In Tamil: வாடிக்கையாளர்கள் அட்டை இல்லாமல் பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ICICI Bank ATM Cardless Cash Withdrawal: பல்வேறு வங்கிகள் கடந்த சில மாதங்களில் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்திலிருந்து (ஏடிஎம்) அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் (Cardless Cash Withdrawal’) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் அட்டை இல்லாமல் ஏடிஎம்’ லிருந்து பணம் எடுக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஐசிஐசிஐ வங்கியின் கணக்குதாரர் தனது கடன் அட்டையை பயன்படுத்தாமல் வங்கியின் கைபேசி ஆப் பான (mobile banking app), iMobile ல் ஒரு கோரிக்கை செய்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.


எப்படி இந்த வசதியை பயன்படுத்துவது

அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை பயன்படுத்த முதலில் சம்மந்தப்பட்ட வங்கியின் கைபேசி ஆப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியின் iMobile ஆப்பை Play Store அல்லது App Store ல் இருந்து தங்களுடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அட்டையில்லாமல் பணம் எடுப்பதற்கு, உங்களுடைய வங்கியின் ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு சம்பந்தப்பட்ட வங்கியின் ஏடிஎம் முக்கு செல்ல வேண்டும்.

1.முதலாவதாக, அட்டையில்லாமல் கைபேசி ஆப் மூலம் பணம் எடுப்பதற்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

இதை செய்வதற்கு வங்கி ஆப்பில் உள்ள ‘services’ என்ற தேர்வுக்கு சென்று ‘cardless cash withdrawal’ for self என்பதை சொடுக்கவும்.

அடுத்து உங்களிடம் தொகை மற்றும் 4 எண் கொண்ட தற்காலிகமான பின் (PIN) எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய சொல்லும். அடுத்து எந்த வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய சொல்லும்.

அடுத்து திரையில் தெரியும் விவரங்களை உறுதிப்படுத்தி ‘submit’ என்பதை சொடுக்க சொல்லும்.

பரிவர்த்தனை முடிந்த பிறகு, வெற்றி செய்தி திரையில் உங்களுக்கு கிடைக்கும்.

2. வங்கியில் இருந்து குறுஞ்செய்தி

அடுத்து உங்களுக்கு வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி ஒரு தனிப்பட்ட குறியீடுடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும். அந்த குறியீட்டை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

3. வங்கி ஏடிஎம் லிருந்து பணத்தை எடுப்பது.

பணம் எடுப்பதற்கான கோரிக்கையை ஆப்பில் செயல்படுத்தியப் பிறகு, குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்முக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

ஏடிஎம்மில் உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்

குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு வந்த தனிப்பட்ட குறியீடு

நீங்கள் முன்பு உள்ளீடு செய்தது போன்ற, சரியாக தேவைப்படும் தொகையை உள்ளீடு செய்யவும்.

இவை அனைத்தும் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்ட உடன் பணம் வரும்.

அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை self-withdrawal க்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். மேலும் தினசரி பணப் பரிவர்த்தனை வரம்பு ரூபாய் 10,000 முதல் 20,000/- வரை மட்டும்தான் செய்ய முடியும். மோசடி மற்றும் scamming காரணமாக வாடிக்கையாளர்கள் அட்டை இல்லாமல் பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close