உங்கள் வங்கி, உங்களைத் தேடி..! கொரோனா காலத்தில் ஓடோடி உதவும் முக்கிய வங்கி
ICICI Bank Mobile ATM in Tamil Nadu: இவை ஊரடங்கு முடியும் வரை வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும், என ஐசிஐசிஐ வங்கி ஒரு அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
ICICI Bank Mobile ATM in Tamil Nadu: இவை ஊரடங்கு முடியும் வரை வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும், என ஐசிஐசிஐ வங்கி ஒரு அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
ICICI Bank Latest Tamil News, ICICI Bank ATM, ICICI Bank Mobile ATM, ICICI Bank CoronaVirus Lockdown, வங்கி, வங்கி தமிழ் செய்தி
Bank News In Tamil: கொரோனா வைரஸ் ஊரடங்கை முன்னிட்டு ஐசிஐசிஐ வங்கி நடமாடும் ஏடிஎம் களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. பணம் எடுப்பது மட்டுமல்லாது, பணம் பரிமாற்றம் செய்வது (transfer of funds), PIN மாற்றுவது போன்ற இதர வசதிகளையும் வாடிக்கையாளர்கள் நடமாடும் ஏடிஎம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
Advertisment
கோவிட் -19 ஊரடங்கை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களது இருப்பிடம் அருகிலேயே சேவை அளிக்கும் பொருட்டு புது டில்லி, மும்பை மற்றும் வாரணாசியில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் நடமாடும் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ICICI Bank Mobile ATM: ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்
Advertisment
Advertisements
ஏடிஎம் வேன்கள் உள்ளூர் அரசு அதிகாரிகளோடு கலந்தாலோசித்து பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும். இவை ஊரடங்கு முடியும் வரை வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும், என ஐசிஐசிஐ வங்கி ஒரு அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வேலூர் அருகில் உள்ள ராணிபேட்டையில் நடமாடும் ஏடிஎம்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பணம் எடுப்பது மட்டுமல்லாது, பணம் பரிமாற்றம் செய்வது (transfer of funds), PIN மாற்றுவது போன்ற இதர வசதிகளையும் வாடிக்கையாளர்கள் நடமாடும் ஏடிஎம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"