Bank News In Tamil: கொடாக் மஹிந்திரா வாடிக்கையாளர்கள் ஈஎம்ஐ மற்றும் கடன் அவகாசத்தை பெற வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து கடன் கணக்கு அல்லது APAC எண்ணை குறிப்பிட்டு pay.later@kotak.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
ஈஎம்ஐ மற்றும் கடன் அட்டை ரசீது தொகையை செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்விதமாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடன் தவனை அவகாசத்தை கொடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் பெற வங்கி அதன் நடைமுறைகளை விளக்கும் வகையில் ஒரு வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
Kotak Mahindra Bank Moratorium On EMI: கொடாக் மஹிந்திரா வங்கி
இந்த திட்டத்தின்படி நிவாரணம் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து கடன் கணக்கு அல்லது APAC எண்ணை குறிப்பிட்டு pay.later@kotak.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் விரிவான தொகுப்பு
பருவ கடன்களுக்கான கடன் தொகை திரும்ப செலுத்தும் முன்குறிப்பிடல் (schedule) மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்படும் மேலும் கடனுக்கான கால அளவு நீட்டிக்கப்படும். அவகாச காலத்தில் தவனை தொகை மற்றும் ஈஎம்ஐ ஆகியவை சரியான முறையில் மீண்டும் கணக்கீடு செய்யப்படும் வட்டி உட்பட. கடன் வாங்கியவர்கள் ஏற்கனவே மார்ச் 2020 க்கான தவணைத் தொகையை செலுத்தியிருந்தால், ஏப்ரல் மற்றும் மே 2020 க்கான கடன் தவணை அவகாசத்தை பெற்றுக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட பிந்தைய தேதியிட்ட காசோலைகள்/ actioning ECS or NACH -mandates போன்றவற்றை அந்தந்த தேதிகளின் படி கலெக்ஷனுக்காக வங்கி வழங்கும். ரிசர்வ் வங்கி வழங்கும் மூன்று மாத நிவாரணத்தை பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு ஒரு மின்னஞ்சல் கடிதத்தை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து 7 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிவாரணத்தை பெற ஒரு ஆப்ஷன் வழங்கப்படும் ஏப்ரல் 1, 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு வரும் முதல் அறிக்கையுடன் அறிவுறுத்தல்கள் அனுப்பப்படும். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் செலுத்தாத வாடிக்கையாளர்கள் தானாக அவகாசத்தில் சேர்க்கப்படும். ரிசர்வ் வங்கி வழங்கும் மூன்று மாத நிவாரணத்தை பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு ஒரு மின்னஞ்சல் கடிதத்தை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து 7 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.