எந்த ஏடிஎம்.களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுங்கள்… அதுவும் இலவசமாக!

Bank Tamil News: வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை, பணம் எடுத்துக் கொள்ளலாம்.

By: Updated: March 26, 2020, 07:37:11 PM

Bank News In Tamil: கோவிட் -19 ஐ தொடர்ந்து எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் இதர வங்கி வாடிக்கையாளர்களுக்கு வந்துள்ள புதிய வசதிகளை பார்ப்போம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

புதிதாக வந்துள்ள கொரோனா வைரஸை மக்கள் துரத்துவதற்காக அவர்களுக்கு உதவும் பொருட்டு மத்திய நிதி அமைச்சகம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதியாக அவர்கள் வீடுகளில் இருக்க முடியும். வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை, பணம் எடுத்துக் கொள்ளலாம் அதற்கு எந்தவித அபராத கட்டணமும் வசூலிக்கப்படாது என, செவ்வாய் கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டெபிட் அட்டைதாரர்கள் வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் இலவசமாக மூன்று மாதங்களுக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம். வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை கடந்து விட்டால், வங்கி அதற்காக அபராத கட்டணம் வசூலிக்கும் என்று கவலைப்படாமல் ஜீன் 30 வரை நீங்கள் எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம், என்பதே இதற்கான அர்த்தம்.

எடுத்துக்காட்டாக ஒரு ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா அல்லது வேறு எதாவது வங்கி ஏடிஎம்மிலிருந்து ஜூன் 30 வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம், இதற்காக எந்தவித அபராத கட்டணமும் வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்படாது.

இரண்டாவது மிகமுக்கியமான அறிவிப்பு நிதி அமைச்சர் வெளியிட்டது சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) பராமரிப்பது தொடர்பாக. ஜூன் 30 வரை, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராத கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதி அமைச்சர் தெரிவித்தார். எஸ்பிஐ வங்கியை தவிர இதர அனைத்து வங்கிகளிளும் சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை (Average Monthly Balance AMB) பராமரிக்க வேண்டும். சராசரி மாத இருப்பை பராமரிக்காவிட்டால் வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு அபராதங்கள் வசூலிக்கும். எனினும் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு உங்கள் சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை பராமரிப்பது பற்றி கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக தங்கள் வருவாயை இழக்க போகும் வாடிக்கையாளர்களுக்கு அரசின் இந்த முடிவு உபயோகமாக இருக்கும்.

நாடு முழுவதும் இன்று முதல் முழு அடைப்பில் பங்கெடுத்துள்ள இந்த மிக முக்கியமான சூழலில் மட்டும் தான் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த வேண்டும். மேலும் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து வெளியே இறங்குவது நல்லதல்ல. 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே இறங்காமல் இருப்பது வைரஸிலிருந்து உங்களை பாதுகாத்திட மட்டுமல்ல, இந்த புதிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கவும் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Atm withdrawl charge hdfc bank icici bank sbi corona virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X