State Bank Of India SBI EMI Moratorium: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான வங்கிகள் ஈஎம்ஐ மற்றும் கடன் அட்டை தவணை தொகை செலுத்துவதை ஒத்திவைத்தலை தொடங்கியுள்ளன. எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், கொடாக் வங்கி, கடன் வாங்கியவர்களுக்கான ஈஎம்ஐ அவகாசம் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை
கடன் வாங்கியவர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் தவணைத் தொகை செலுத்துவதை மறு திட்டமிட இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முறை வாய்ப்பு வழங்கியுள்ளதற்கு பிறகு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான வங்கிகள் ஈஎம்ஐ மற்றும் கடன் அட்டை தவணை தொகை செலுத்துவதை ஒத்திவைத்தலை தொடங்கியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் படி, அனைத்து இந்திய வங்கிகள் மற்றும் இந்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் தவணைத் தொகை செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 1 முதல் மே 31, 2020 வரை ஒத்திப்போடலாம்.
ஈஎம்ஐ மற்றும் கடன் அட்டை தவணை செலுத்துவதை எவ்வாறு ஒத்திப்போடலாம்
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
எஸ்பிஐ, காலம் தாழ்த்தி கடன் தவனை திருப்பி செலுத்துவதை முழுமையாக வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தெளிவாக மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தவணை செலுத்துவதை காலம் தாழ்த்தி கொடுப்பதனால் அவர்களது திருப்பி செலுத்தும் அட்டவணையில் எந்தவிதமான தாக்கம் ஏற்படும் என்றும் அதற்கான வட்டி தொகை குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற வங்கியின் இணையதளத்துக்கு சென்று அவர்களுடைய விருப்பத்தை தேர்வு செய்யலாம். கடன் தவனை செலுத்துவதை ஒத்தி போடுவதை வங்கி அவர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை சொடுக்குவதன் மூலமும் அல்லது மின்னஞ்சல் மூலமும் செய்யலாம். கால அளவில் ஏற்படும் மாற்றம் வாடிக்கையாளர்களின் வட்டி செலவை அதிகரிக்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு வங்கி தெரிவித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank)
வங்கியின் அனைத்து சில்லறை வாடிக்கையாளர்களும் இந்த வசதியை பெற தகுதியுடையவர்கள் என்றாலும் இது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு தன்னார்வ நன்மை. இந்த வசதியை பயன்படுத்த விரும்பாத வாடிக்கையாளர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். வழக்கம்போல அவர்களின் கணக்கிலிருந்து தவணை தொகை கழித்துக் கொள்ளப்படும். HDFC வங்கி வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற தொகைபேசி அழைப்பு மூலமாகவோ அல்லது தங்கள் விருப்பத்தை விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலமாகவோ செய்யலாம்.
ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தவணையை ஒத்திப்போடும் வசதியை பெற விரும்பாவிட்டால் இதிலிருந்து வெளியே வர ஒரு மின்னஞ்சல் அனுப்பவேண்டும் அல்லது வங்கி கிளையை அணுக வேண்டும். எந்தவித எழுத்துபூர்வமான விருப்பமும் தெரிவிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் தானாக் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.