Bank News IN Tamil: சேமிப்பு வங்கி கணக்கு என்பது அடிப்படை நிதி தயாரிப்புகளில் ஒன்றாகும். பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை பல வேறுபாடுகளில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்குகளை வழங்குகின்றன. இவை அடிப்படை சேமிப்பு கணக்குகள். இதில் உங்கள் பணத்தை முதலீடு செய்து 2.75 முதல் 4 சதவிகிதம் வரம்பில் வட்டியை ஈட்டலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வங்கி மற்றும் தொகை ஆகியவற்றை பொருத்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வட்டித் தொகை வாடிக்கையாளரின் கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகள் வழங்கும் சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள்
எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்
சேமிப்பு வைப்புகளுக்கு எஸ்பிஐ வட்டியை குறைத்துள்ளது. எஸ்பிஐ சேமிப்பு வைப்பு 2.75 சதவிகித வட்டிக்கு 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைந்த வருவாயை கொடுக்கும். தற்போது எஸ்பிஐ சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 3 சதவிகிதம், ஒரு லட்சம் வரை அல்லது அதற்கு அதிகமான தொகையுள்ள வைப்புகளுக்கு. புதிய விகிதங்கள் ஏப்ரல் 15 2020 முதல் நடைமுறைக்கு வரும்.
SB வைப்பு கணக்குகளுக்கு ஒரு லட்சம் வரை இருப்பு – 2.75 சதவிகிதம் p.a.
ஒரு லட்சத்துக்கு அதிகமான வைப்பு உள்ள SB வைப்பு கணக்குகளுக்கு – 2.75 சதவிகிதம்
ஹெச்டிஎப்சி வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்
ஹெச்டிஎப்சி வங்கி ரூபாய் 50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு வைப்பு இருப்புக்கு ஆண்டுக்கு 3.50 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதற்கு அதிகமான தொகைக்கு வங்கி 4 சதவிகித வட்டி விகிதத்தை விதிக்கிறது.
ரூபாய் 50 லட்சத்துக்கும் கீழ் – 3.50 சதவிகிதம்
ரூபாய் 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் – 4 சதவிகிதம்
ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்
ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 3.25 சதவிகிதம் முதல் 3.75 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை தருகிறது. ரூபாய் 50 லட்சத்துக்கும் கீழ் உள்ள கணக்கு இருப்புகளுக்கு (account balance) வட்டி விகிதம் ஆண்டுக்கு 3.25 சதவிகிதம். ரூபாய் 50 லட்சத்துக்கும் மேல் உள்ள சேமிப்பு இருப்பு தொகைகளுக்கு 3.75 சதவிகிதம் வட்டி விகிதம். வங்கியின் சேமிப்பு கணக்குகளின் இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 9, 2020 முதல் நடைமுறைக்கு வரும்.
ரூபாய் 50 லட்சத்துக்கு கீழ் – 3.25 சதவிகிதம்
ரூபாய் 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் – 3.75 சதவிகிதம்
ஆக்ஸிஸ் வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்
ரூபாய் 50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு வைப்பு இருப்புகளுக்கு ஆக்ஸிஸ் வங்கி ஆண்டுக்கு 3.50 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதற்கு அதிகமான தொகைகளுக்கு வங்கி ஆண்டுக்கு 4 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த விகிதங்கள் 27 மார்ச் 2020 முதல் நடைமுறையில் உள்ளன.
ரூபாய் 50 லட்சத்துக்கும் குறைவு – 3.50 சதவிகிதம் ஆண்டுக்கு
ரூபாய் 50 லட்சம் மற்றும் ரூபாய் 10 கோடி வரை – 4.00 சதவிகிதம் ஆண்டுக்கு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil