SIP in mutual funds details: ஒரு நடுத்தர வர்க்கத்தினராக இருந்து, மாத சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இல்லாமல் போகும் போது உங்கள் வங்கிக் கணக்கில் கோடி ரூபாய் இருக்க ஒரு முதலீடு திட்டம் இருந்தால் நன்றாக தானே இருக்கும்?
பலருக்கும் நிதி நெருக்கடி இல்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் கூட அளவான வருமானம், குழந்தைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம் என்று யோசிக்கும் போது வருகின்ற வருமானம் அப்படியே காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை.
நாள் ஒன்றுக்கு நீங்கள் ரூ. 20 சேமித்தால் போதும் நிச்சயமாக உங்களால் ரூ. 10 கோடி வரை சேமிக்க முடியும். எப்படி என்று யோசிக்கின்றீர்களா? உங்களின் கேள்விக்கான பதில் கீழே.
மியூச்சுவல் ஃபண்ட் குறித்து நம் அனைவருக்குமே தெரியும். நீங்கள் அதில் உள்ள சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளானில் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களால் கோடி ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். SIP என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ. 500 கொண்டு முதலீடு செய்யமுடியும். உங்களின் 20 வயதில் நாள் ஒன்றுக்கு ரூ. 20 வீதம் சேமித்தால் மாதம் ரூ. 600 கிடைக்கும். இந்த 600 ரூபாயை நீங்கள் சிப் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் இந்த இலக்கை மிகவும் எளிமையாக அடைய முடியும்.
வருடாந்திர ரிட்டர்ன்ஸ் 15% என்று வைத்துக் கொண்டால் ரூ. 1.88 கோடி, 40 ஆண்டுகால முதலீட்டிற்கு பிறகு உங்கள் கையில் இருக்கும். இந்த 40 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 2,88,000 முதலீடு செய்தால் மட்டும் போதும். ஒரு வேளை உங்களின் வருடாந்திர ரிட்டர்ன்ஸ் 20% ஆக இருக்கும் பட்சத்தில் ரூ. 10.21 கோடி உங்கள் கைக்கு கிடைக்கும்.
மாதம் ரூ. 900 கூட உங்களால் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இயலும். குறைவான முதலீடு ஆனால் நீண்ட கால திட்டம் என்பதால் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டர்ன்ஸ் நீங்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடுதல் தொகையை தருகிறது. ஆனாலும் மியூச்சுவல் ஃபண்டுகள் அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே நீங்கள் ஒரு ஆலோசகரின் ஆலோசனைப் படி உங்களின் திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்வது நன்மையளிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil