பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. பலரும் தங்களின் எதிர்காலம் குறித்த திட்டத்தை துவங்கியுள்ளனர். தங்களின் குழந்தைகளின் படிப்பு குறித்து அதிகம் யோசித்து வரும் பெற்றோர்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். படிப்பிற்காக கடன் வாங்குவதா, வங்கிக் கடன் வாங்குவதா இல்லை இருக்கும் சொத்தில் எதையாவது விற்பனை செய்வதா? போன்ற கேள்விகள் எழும். இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு இருந்தால், பதில்கள் இங்கே.
கடன் வாங்குவது மட்டுமின்றி சொத்தை விற்பது என இரண்டிலும் நிறைகள் குறைகள் உள்ளன. தற்போது வங்கியில் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது. எனவே உங்களால் எளிதில் வங்கிக் கடனை வாங்க முடியும். தன்னுடைய மேற்படிப்பிற்காக வாங்கியக் கடனை திருப்பி செலுத்தும் போது பணத்தின் அருமையையும் உங்களின் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இ.எம்.ஐ. துவங்குவதற்கு முன்பே நீங்கள் வட்டித் தொகையை செலுத்த துவங்கியிருந்தால், கல்விக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியும் வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து கழிக்கத் தகுதியுடையது, அதை நீங்கள் பெறலாம். குறை என்னவென்றால் நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
நீங்கல் உங்களின் சொத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் நீங்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக சொத்தை முதலீடாக மாற்றுகின்றீர்கள். இதில் வட்டி ஏதும் இல்லை. ஆனால் சொத்திற்கு கிடைக்கும் (ஒரு வேளை வீடாக இருக்கும் பட்சத்தில்) வாடகையைப் பற்றி யோசனை செய்ததுண்டா? ரியல் எஸ்டேட்டைப் பொறுத்த வரையில் தற்போது விலைகள் ஒன்றும் உயர்வானதாக இல்லை. எனவே நீங்கள் சரியான நேரம் வரும் வரை காத்திருந்து நல்ல விலைக்கு வீட்டினை விற்பனை செய்ய முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil