Bank news Tamil : பணி ஓய்வு பெறும் போது கையில் கோடிக் கணக்கில் பணம் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். யாரையும், எதற்காகவும் நம்பாமல் நிம்மதியாக இருக்க ஆரம்பத்திலேயே பணம் சேமிப்பது மிகவும் நல்லது. மாதம் எவ்வளவு பணம் சேமித்தால் ஓய்வு காலத்தின் போது உங்கள் கையில் கோடிக் கணக்கில் பணம் இருக்கும் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
நீங்கள் எப்போது உங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறப்போகிறீர்கள் மற்றும் வளர்ச்சி விகிதத்தை கணக்கில் கொண்டு நீங்கள் உங்களின் இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும். மிகவும் இளம் வயதிலேயே சேமிக்க ஆரம்பித்துவிட்டால், அதிகப்படியான பணத்தை மாதாந்திர சேமிப்புக்கு ஒதுக்குவது குறையும். உங்களின் ஓய்வூதிய இலக்காக ரூ. 1 கோடி அல்லது 2 கோடி என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் அதனை அதிகரிப்பது நல்லது.
ஒரு ஆண்டில் பண வீக்கம் என்பது 5% என்று வைத்துக் கொண்டால் 20 மற்றும் 25 வருடங்களில் இந்த பணவீக்கம் முறையே ஒரு கோடிக்கு ரூ. 38 லட்சமாகவும், 2 கோடிக்கு ரூ. 30 லட்சமாகவும் இருக்கும்.
ஆண்டு வளர்ச்சி 12% ஆக இருக்கும் என்று வைத்துக் கொள்வோம்; 20 வருடங்களில் உங்கள் கைகளில் ரூ. 5 கோடி இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மாதம் 50 ஆயிரம் சேமிக்க வேண்டும். 25 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் நீங்கள் மாதம் 26500 சேமிக்க வேண்டும். 30 வருடங்களில் கைகளில் ரூ. 5 கோடி இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மாதம் ரூ. 14,250 சேமிக்க வேண்டும்.
மாதாந்திர முதலீட்டு திட்டம் (SIP monthly investment plan)
நீங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முறையான முதலீட்டுத் திட்டத்தை (SIP) துவங்கி ஓய்வூதிய கால தேவைகளுக்காக முதலீடு செய்யலாம். பங்கு சந்தைபெரிய அளவில் வீழ்ச்சி அடையும் போது, அதே மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவில் மேலும் பணத்தை சேர்க்கவும். அந்த நேரத்தில் குறைந்த NAV களைப் பயன்படுத்தவும். சந்தை நிலைமைகளின் அடிப்படையில் தேவைப்பட்டால் SIP மற்றும் லம்ப்சம் முதலீட்டைப் பயன்படுத்தவும். நீங்கள் ஸ்டெப்-அப் SIP ஐப் பயன்படுத்தலாம், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்புடன் தொடங்கலாம், பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரிக்கலாம். மேலும் நீங்கள் உங்களின் ஓய்வு காலத்தை நெருங்கிய 5 முதல் மூன்று ஆண்டுகளில் பங்கு சந்தையில் டி-ரிஸ்க் எடுப்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil