கொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. வழங்கும் கடன்; இந்த நேரத்தில் மிகவும் உதவியானது இது!

60 மாதங்களில் திருப்பி அடைக்க வேண்டிய இந்த கடனுக்கு 3 மாதங்கள் வரை மொராட்டோரியமும் உண்டு.

SBI, bank news, covid assistance

Bank News Tamil SBI bank Personal Loan scheme Kavach : இந்த ஒரு வருடம் கொரோனாவால் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள். யோசிக்கும் போது தலையே சுற்றுகிறது. சில நேரங்களில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டது. இன்றா, நாளைக்கா வேலைக்கான உத்தரவாதம் எவ்வளவு நாள் என்று தெரியாமல் போனது. மேலும் மோசமாக நம்முடைய உற்ற உறவினர்களுக்கு கொரோனா வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் நம்மை உயிரோடு கொன்றுவிட்டது என்று தான் கூற வேண்டும்.

பல நேரங்களில் அரசு வழங்கும் உதவிகள் போதுமானதாக இருந்தாலும் கூட, வாழ்வாதாரத்தில் பெரும் பகுதியை நாம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு செலவிடும் சூழல் உருவாதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.

நம்முடைய சூழலை சரியாக புரிந்து கொண்ட எஸ்.பி.ஐ வங்கி சமீபத்தில் கொல்லாட்ரல் ஃப்ரீ கவாச் தனிநபர் கடனை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக நீங்கள் இந்த கடனை பெற்றுக் கொள்ள முடியும்.

ரூ. 5 லட்சம் வரை நீங்கள் பெறும் இந்த கடனுக்கு வருடத்திற்கு 8.5% வட்டி மட்டுமே. 60 மாதங்களில் திருப்பி அடைக்க வேண்டிய இந்த கடனுக்கு 3 மாதங்கள் வரை மொராட்டோரியமும் உண்டு. தற்போது நிதி பற்றாக்குறையால் பெரிதும் அவஸ்திபட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த கடனானது மிகப்பெரிய அளவில் உதவும் என்று வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bank news tamil sbi personal loan scheme kavach

Next Story
ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்பவரா? உங்களை கண்காணிக்க அரசு உத்தரவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com