பிரபல தனியார் வங்கியின் ஏடிஎம் கார்டில் பிரச்சனை.. வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பு!

120 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கியில் வங்கி கணக்கு உள்ளது.

bank of baroda atm : பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இணைக்கப்பட்டது . இந்த வங்கிகள் இணைப்பு நடைமுறை ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது .

ஆனால் வங்கிகள் இணைப்பு தொழில்நுட்ப தாமதம் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு “பேங்க் ஆப் பரோடா” வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது .

இதில் தேனா , விஜயா , பேங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை அனைத்து வங்கி (எஸ்பிஐ ,கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் , ஐசிஐசிஐ , லக்‌ஷி விலாஸ் வங்கி, கர்நாடகா வங்கி, இந்தியன் வங்கி_ உள்ளிட்ட ATM-கள் அனைத்தையும் பயன்படுத்தி பணம் எடுக்கலாம் எனவும் , ஏஎடிஎம் – யைப் பயன்படுத்தி ரகசிய குறியீடு (PASSWORD NUMBER) மாற்றிக்கொள்ளலாம் எனவும் , வங்கி கணக்கில் உள்ள விவரங்கள் சேவையை எளிதாக வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி சேவையைக் கொள்ளலாம் என “பேங்க் ஆப் பரோடா” வங்கித் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கஸ்டமர்ஸ் காட்டில் அடை மழை தான்! கடனுக்கு 8% வட்டி குறைந்தது.

இந்த சேவை அனைத்தும் முற்றிலும் இலவசம் என “பேங்க் ஆப் பரோடா வங்கி” அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக “பேங்க் ஆப் பரோடா” வங்கி திகழ்கிறது.

இதில் நாடு முழுவதும் 9500 வங்கி கிளைகளும் , 13,400 ஏடிஎம் இயந்திரங்களும் , சுமார் 85000 ஊழியர்கள் இந்த வங்கியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் 120 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கியில் வங்கி கணக்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close