இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கஸ்டமர்ஸ் காட்டில் அடை மழை தான்! கடனுக்கு 8% வட்டி குறைந்தது.

வங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

iob loan interest rate : இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு, வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் குறைத்த நிலையில், சில வங்கிகள் இதன் அடிப்படையில் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. இதன் அடிப்படையில் இந்திய ஓவர்சீஸ் வங்கி வட்டியை குறைத்துள்ளது.

ஓராண்டு மற்றும் அதற்கு கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படை புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 15 நாட்களுக்கான வட்டி விகிதம் 8.15% சதவிகிதமாகவும், ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.30% சதவிகிதமாகவும், 3 மாதங்களுக்கு 8.45% சதவிகிதமாகவும், 6 மாதங்களுக்கு 8.50% சதவிகிதமாகவும், வருடத்திற்கு 8.65% சதவிகிதமாகவும், அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு 8.75% சதவிகிதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 8.85% சதவிகிதமாகவும் கடங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி குறைப்பினால் கடங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகுந்த பயன் அடைவார்கள் என்றும் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்க்ளுக்கு தொடர்ந்து மகிழ்ச்சியான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் 3 மாதங்களுக்கான வட்டி விகிதம் (8.50 சதவீதத்தில் இருந்து) 8.45 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இது தவிர, சுப கிரஹா திட்டம், என்ஆர்ஐ வீட்டு கடன், வீடு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களின் கீழ் வீட்டு கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணங்களை விழாக்கால சலுகையாக வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

Cheque மூலம் பணம் எடுக்க இனி ஏடிஎம் சென்றால் போதும்!

இதனைத்தொடர்ந்து கடன்கள் மீதான் வட்டி விகிதத்தையும் அறிவித்து வங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close