Advertisment

399 நாட்கள் டெபாசிட், 7.15% வட்டி: இரண்டு புதிய எஃப்.டி அறிமுகம்

Special fixed deposit schemes | பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

author-image
WebDesk
New Update
Shriram Finance offers up to 9 4 percent interest on fixed deposit investments

பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிகளின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் இங்குள்ளன.

Special fixed deposit schemes | பேங்க் ஆஃப் பரோடா முதலீட்டாளர்களுக்கு இரண்டு சிறப்பு வைப்புத் திட்டங்களை வழங்குகிறது. அதில், 333 நாள்கள் கால அவகாசம் கொண்ட திட்டம் ஒன்று.

இந்த தமாகா டெபாசிட் திட்டம் ஆண்டுக்கு 7.15 சதவீத வட்டியை வழங்குகிறது.

மற்ற திட்டமானது 399 நாள் மான்சூன் தமாகா வைப்புத் திட்டம் ஆகும், இது டெபாசிட் செய்பவர்களுக்கு 7.25 சதவீத வட்டியை வழங்குகிறது. சமீபத்திய ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஜூலை 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலும், 360 நாள் வைப்புத்தொகைக்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது.

Advertisment

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

இதேபோல், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வெவ்வேறு காலங்களுக்கு நான்கு சிறப்பு திட்டங்களை வழங்குகிறது

அவை,

  • 200 நாட்கள்
  • 400 நாட்கள்
  • 666 நாட்கள்
  • 777 நாட்கள் திட்டங்கள் ஆகும்.

இதில், 200 நாள் டெபாசிட்டுக்கு 6.9 சதவீதம், 400 நாள் டெபாசிட்டுக்கு 7.10 சதவீதம், 666 நாள் டெபாசிட்டுக்கு 7.15 சதவீதம் மற்றும் 777 நாள் டெபாசிட்டுக்கு 7.25 சதவீதம் என வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

சமீபத்திய வட்டி விகிதங்கள் ஜூலை 8, 2024 முதல் அமலுக்கு வருகின்றன. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா சிறப்புக் கால வைப்புத்தொகைக்கு மட்டுமே அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான சிறப்புக் காலத் திட்டங்கள் 7 சதவிகிதம் மேல் வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் போது, ​​மற்ற வைப்புத் தொகைகள் ஆண்டுக்கு 7 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி தனது நிலையான வைப்புத்தொகை (எஃப்டி) வட்டி விகிதங்களை ஜூலை 2, 2024 முதல் திருத்தியுள்ளது. சமீபத்திய விகிதங்கள் இப்போது வழக்கமான குடிமக்களுக்கு 3 முதல் 7.20 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.5 மற்றும் 7.75 சதவீதம் வரை இருக்கும் வரையில் உள்ளன.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கியின் வட்டி விகிதங்கள் இப்போது வழக்கமான குடிமக்களுக்கு 3 முதல் 7.2 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம் மற்றும் 7.75 சதவீதம் வரையிலும் இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment