Bank of Baroda Fixed Deposit Interest Rate Hike 2023 : மூத்த குடிமக்கள் மற்றும் பிற வைப்பாளர்கள் இப்போது பேங்க் ஆஃப் பரோடா (BoB) வழங்கும் பல்வேறு தவணைகளின் நிலையான வைப்புகளுக்கு 25 bps கூடுதல் வட்டியைப் பெறுவார்கள்.
இது தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “NRO மற்றும் NRE கால வைப்பு உள்ளிட்ட உள்நாட்டு சில்லறை கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு மார்ச் 17, 2023 முதல் ரூ.2 கோடிக்குக் குறைவான டெபாசிட்களுக்குப் பொருந்தும்.
புதிய வட்டி விகிதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை நிலையான வைப்பு: வங்கி இப்போது பொது மக்களுக்கும் என்ஆர்ஓ கணக்குகளுக்கும் 6.5% வட்டியை வழங்குகிறது. வசிக்கும் மூத்த குடிமக்கள் 7.15% வட்டி விகிதத்தைப் பெறலாம்.
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிலையான வைப்பு: வங்கி இப்போது பொது மக்களுக்கும் என்ஆர்ஓ கணக்குகளுக்கும் 6.5% வட்டியை வழங்குகிறது. வசிக்கும் மூத்த குடிமக்கள் 7.50% வட்டி விகிதத்தைப் பெறலாம்.
NRE கால வைப்புத்தொகைகள் : ரூ. 2 கோடிக்கு மேல் 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரை: வங்கி இப்போது 6.5% வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள NRE கால வைப்புத்தொகைகளுக்கு வங்கி தற்போது 6.5% வட்டியை வழங்குகிறது.
பரோடா வரி சேமிப்பு கால வைப்பு: வங்கியானது 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 6.5% வட்டியை பொது வைப்பாளர்களுக்கு வழங்குகிறது.
குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்கள் 5 ஆண்டு வரி சேமிப்பு வைப்புத்தொகையில் 7.15% மற்றும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வரி சேமிப்பு வைப்புகளுக்கு 7.5% வட்டி பெறலாம்.
பரோடா அட்வான்டேஜ் நிலையான வைப்பு: வங்கி இப்போது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 6.75% வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 7.4% வட்டி பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/