பேங்க் ஆஃப் பரோடா ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை தற்போது மாற்றியுள்ளது. இந்த நிலையில் தற்போது பொது மக்களுக்கு FD வட்டி விகிதம் 7.25 சதவீதம் வரை கிடைக்கும்.
அதேநேரத்தில் மூத்த குடிமக்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் நிலையான வைப்புத்தொகையில் 7.75 சதவீதம் வரை சம்பாதிக்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மே 12, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா FD வட்டி விகிதங்கள்
பேங்க் ஆஃப் பரோடா ஏழு முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேநேரத்தில், 46 முதல் 180 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகள் 4.5 சதவீத வட்டி விகிதத்தைப் பெறும்.
தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா 181 முதல் 210 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.5 சதவீத வட்டியை செலுத்தும். 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5.75 சதவீதம் வட்டி கிடைக்கும்.
மேலும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும்.
இதற்கிடையில், 399 நாள்களுக்கு பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டம் என அழைக்கப்படும் சிறப்பு டெபாசிட்டில், பேங்க் ஆஃப் பரோடா அதிகபட்ச வட்டி விகிதமான 7.25 சதவீதத்தை வழங்குகிறது.
மூத்தக் குடிமக்கள்
7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு வங்கி 3.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 46 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FDகள் 5 சதவீத வட்டியைப் பெறும்.
181 முதல் 210 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.75 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.25 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 7.55 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
இதற்கு முன்பு இந்த காலக்கெடுவுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.25 சதவீதமாக இருந்தது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.15 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு மேல் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.55 சதவீதமும் வட்டியை வங்கி வழங்குகிறது.
இந்த நிலையில், 99 நாட்களுக்கு பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டம் என அழைக்கப்படும் சிறப்பு டெபாசிட்டில், பேங்க் ஆஃப் பரோடா அதிகபட்ச வட்டி விகிதமான 7.75 சதவீதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“