7.15 சதவீதம் வட்டி; பேங்க் ஆஃப் பரோடா க்ரீன் டெபாசிட் தெரியுமா?

பேங்க் ஆஃப் பரோடா வங்கி பசுமை வைப்புத் தொகை இந்தியாவின் பசுமையான மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான மாற்றத்தில் பங்கேற்கிறது. வங்கி 7.15% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி பசுமை வைப்புத் தொகை இந்தியாவின் பசுமையான மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான மாற்றத்தில் பங்கேற்கிறது. வங்கி 7.15% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
indian-farmers

பேங்க் ஆஃப் பரோடா வங்கி 7.15% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா வங்கி பசுமை வைப்புத் தொகை எனப்படும் க்ரீன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
“இந்த பாப் எர்த் கிரீன் டெர்ம் டெபாசிட்கள் டெபாசிடர்களுக்கு பலவிதமான தவணைக்காலங்களில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், இது இந்தியாவின் பசுமையான மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான மாற்றத்தில் பங்கேற்கிறது. வங்கி 7.15% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். ஓராண்டுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

அதேபோல் 1.5 ஆண்டுகள் டெபாசிட்டுக்கு 6.75 சதவீதமும், 777 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.15 சதவீதமும், 1111 நாள்கள் டெபாசிட்டுக்கு 6.4 சதவீதமும், 1717 நாள்கள் டெபாசிட்டுக்கு 6.4 சதவீதமும், 2201 நாள்கள் டெபாசிட்டுக்கு 6.4 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.

பசுமை வைப்புத்தொகையானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களில் தங்கள் உபரி பண இருப்புக்களை முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கான நிலையான கால வைப்புத்தொகையாகும்.
இந்த வைப்புத்தொகை முதலீட்டாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் திட்டங்களில் உபரி பண இருப்புகளை முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் நிலைத்தன்மை இலக்குகளை நிறைவேற்றுவதற்கான தளத்தை வழங்குகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: