New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/rupee-pixabay-1200-1-2.jpg)
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது போஸ்ட் ஆபிஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும்.
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது போஸ்ட் ஆபிஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா, பெண்களுக்கான அரசின் புதிய முயற்சியான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (எம்எஸ்எஸ்சி) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளை தொடர்ந்து, அஞ்சல் அலுவலகங்களிலும் கிடைக்கும்.
இதனை, 2023-24 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
இதில், ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதம் கிடைக்கும். இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரையிலான இரண்டு வருட காலத்திற்கு செல்லுபடியாகும்.
பேங்க் ஆஃப் பரோடாவில், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டங்களை வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் தொடங்கிக் கொள்ளலாம்.
மேலும் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்துக் கொள்ளலாம். ரூ.1000 மற்றும் ரூ.100ன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம்.
கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் முடிந்த பிறகு, கணக்கு வைத்திருப்பவர் தகுதியான இருப்பில் 40% வரை ஓரளவு திரும்பப் பெறலாம். MSSC கணக்கு திறப்பு படிவங்கள் அனைத்து பேங்க் ஆஃப் பரோடா கிளைகளிலும் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.