தனிநபர் மற்றும் சில்லறை கடன்கள் மீதான வட்டி விகிதம் : பேங்க் ஆப் பரோடா அதிரடி குறைப்பு
மார்ச் 28ஆம் தேதி முதல் சில்லரை, தனிநபர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.25 சதவிகிதமாக குறைத்துள்ளதாக பேங்க் ஆப் பரோடா கூறியுள்ளது
மார்ச் 28ஆம் தேதி முதல் சில்லரை, தனிநபர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.25 சதவிகிதமாக குறைத்துள்ளதாக பேங்க் ஆப் பரோடா திங்கள் அன்று கூறியுள்ளது. மார்ச் 28, 2020 முதல் பேங்க் ஆப் பரோடா Baroda Repo Linked Lending Rate (BRLLR) ஐயும் 75 basis புள்ளிகள் குறைத்துள்ளது, என ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. RBI Repo Rate உடன் இணைக்கப்பட்ட BRLLR, பாரத ரிசர்வு வங்கி 5.15 சதவிகிதத்திலிருந்து 4.40 சதவிகிதமாக குறைத்துள்ள Repo Rate க்கு இணையாக கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மார்ச் 28, 2020 முதல் அனைத்து தனிநபர் கடன்கள் மற்றும் அனைத்து சொத்து வகுப்புகளின் சில்லறை கடன்களுக்கான புதிய மாறுபடும் கடன் விகிதங்கள் (floating rate loans), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மாறுபடும் கடன் விகிதங்கள் 7.25 சதவிகிதமாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகித மாற்றங்களை பேங்க் ஆப் பரோடா உடனடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு மாற்றிக் கொடுத்துள்ளது.
திறக்கப்பட்டுள்ள கடன் திட்டங்களை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம் மேலும் அனைத்து விதமாக கடன் தேவைகளையும் மிக வசதியான வழியில் பூர்த்தி செய்ய வங்கி எல்லா நேரங்களிலும் கிடைக்கிறது, என பேங்க் ஆப் இந்தியா வங்கியின் Executive Director Vikramaditya Singh Khichi தெரிவித்துள்ளார்.
பழைய கடன்களுக்கு வட்டி விகிதம் வெளிபுற அளவுகோலின் கீழ் BRLLR இணைக்கப்பட்ட மாதாந்திர இடைவெளியில் மீட்டமைக்கப்படும் Mark-up/base spread அல்லது strategic premium த்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி Repo Rate ஐ 5.15 சதவிகிதத்திலிருந்து 4.40 சதவிகிதமாக குறைத்துள்ளதைப் போல் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்காக வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil