Advertisment

பேங்க் ஆஃப் இந்தியா புதிய ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம்; செயல் இயக்குனர் பேட்டி

இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் அதிகம் பயனடைய முடியும் என பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனர் கார்த்திகேயன் கோவையில் பேட்டியளித்தார்.

author-image
WebDesk
New Update
Bank of India New Fixed Deposit

பேங்க் ஆஃப் இந்தியா 666 நாள்கள் புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கோவை மண்டல மேலாளர்கள் ஆலோசனை கூட்டம் பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் வங்கியின் வளர்ச்சி குறித்தும் வாடிக்கையாளர்களிடையே வங்கியின் புதிய திட்டங்களை கொண்டு செல்வதில் மேலாளர்களின் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

Advertisment

முன்னதாக பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம், "வங்கி அறிமுகபடுத்தி உள்ள பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பேசினார்.

அப்போது, புதிதாக அறிமுகபடுத்திய 666 நாட்கள் நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் 

ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு "666" நாட்களுக்கு  மூத்த குடிமக்களுக்கு ஆண்டிற்கு "7.95" சதவீதம் வழங்கும் இந்த தனித்துவமான முதலீட்டு வாய்ப்பை இதர வாடிக் கையாளர்களும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த 666 நாட்கள் நிலையான வைப்புத் தொகை திட்டத்தை தொடங்குவதன் மூலம் நிலையான வைப்புகளில் அதிக வருமானத்தை பெறலாம்.

வாடிக்கையாளர்கள் எந்த வொரு "பேங்க்ஆப் இந்தியா" கிளையையும் தொடர்பு கொண்டு வங்கியின் புதிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு அதில் சேர்ந்து பயன் பெறலாம்.

மேலும் அடல் பென்சன் யோஜனா - சுரக்‌ஷா பீமா - ஜீவன் ஜோதி - பி.எம்.விஸ்வகர்மா என பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்க வங்கி தயாராக இருப்பதாகவும் இதில் தகுதியான நபர்கள் விண்ணிப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது  பேங்க் ஆப் இந்தியாவின் 

பொது மேலாளர் முகேஷ் சர்மா மற்றும் கோவை மண்டல மேலாளர் சம்பத் குமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment