Advertisment

பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி வட்டி உயர்வு; புதிய வட்டியை செக் பண்ணுங்க

வங்கி 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3% முதல் 7.25% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான நிரந்தர வைப்பு வட்டி விகிதங்களை பேங்க் ஆஃப் இந்தியா திருத்தியுள்ளது. தற்போது, வங்கி 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3% முதல் 7.25% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

புதிய வட்டி விகிதம்

டெபாசிட் காலம்  சாதாரண குடிமக்கள் (%)
7-14 நாள்கள் 3
15-30 நாள்கள் 3
31-45 நாள்கள் 3
46-90 நாள்கள் 4.50
91-179 நாள்கள் 4.50
180-210 நாள்கள் 5.50
270 நாள்கள்-1 ஆண்டுகள் 5.75
1 ஆண்டு 6.80
1 ஆண்டு முதல் 2 ஆண்டுவரை 6.80
2 ஆண்டு 7.25
2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் 6.75
3-5 ஆண்டுகள் 6.50
5-8 ஆண்டுகள் 6
8-10 ஆண்டுகள் 6

மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம்

பேங்க் ஆஃப் இந்தியா சாதாரண குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை விட 0.50 சதவீதம் அதிகப்பட்சமாக வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு பொருந்தும்.

மூத்தக் குடிமக்கள்

முதிர்வு காலம் மூத்தக் குடிமக்கள் (%) சூப்பர் சீனியர் (%)
180-210 நாள்கள் 6.00 6.15
211-269 நாள்கள்  6.00 6.15
270 நாள்கள்-1 ஆண்டுக்குள் 6.25 6.40
1 ஆண்டு 7.30 7.45
1 ஆண்டுக்கு மேல் 2 ஆண்டுக்குள் 7.30 7.45
2 ஆண்டுகள்  7.75 7.90
2 ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுக்குள்  7.25 7.40
3 ஆண்டுக்கு மேல் 5 ஆண்டுக்குள் 7.25 7.40
5 ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் 6.75 6.90
8 ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு மேல் 6.75 6.90

 

சாதாரண குடிமக்கள் வட்டி விகிதம்

7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வழக்கமான குடிமக்களுக்கு வங்கி 3% வட்டி விகிதத்தை செலுத்துகிறது. 46 முதல் 179 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.50 சதவீத வட்டி கிடைக்கும்.

180 முதல் 269 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வங்கி 5.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 270 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வங்கி 5.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஒரு வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைகள் இப்போது 6.80 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இது 2 ஆண்டுகளுக்கு மேல் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான நிலையான வைப்புத் திட்டங்களுக்கு 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலவரையறையில் எஃப்டிகளுக்கு 6.50 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. வங்கி 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இடையில் 6 சதவீதத்தை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment