Advertisment

எஃப்.டி வட்டியை திருத்திய பேங்க் ஆஃப் இந்தியா; எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ எப்படி?

பேங்க் ஆஃப் இந்தியா, 7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, பாங்க் ஆஃப் இந்தியா (BOI) 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Bank of India Fixed Deposits rates | பேங்க் ஆஃப் இந்தியா, ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை புதுப்பித்துள்ளது.

Advertisment

இந்தத் திருத்தத்தைத் தொடர்ந்து, வங்கி தற்போது 3% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்களை 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகிறது.

sbi state bank of india

இந்த விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. மூத்த குடிமக்கள் 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட தவணைக்காலங்களில் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) கூடுதலாகப் பெறுகிறார்கள்.

சூப்பர் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 65 பிபிஎஸ் வழங்கப்படுகிறது. ₹2 கோடிக்குக் குறைவான டெபாசிட்கள் மற்றும் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்கள் 75 பிபிஎஸ் என்ற கூடுதல் பிரீமியமாக 25 பிபிஎஸ் பெறுகிறார்கள்.

அதேபோல், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 90 பிபிஎஸ் என மொத்தம் 25 பிபிஎஸ் கூடுதல் பிரீமியம் வழங்கப்படுகிறது.

எஸ்.பி. ஐ (SBI) சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் சமீபத்திய நிலையான வைப்பு (FD) விகிதங்கள், பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.5% முதல் 7% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.5% வரையிலும் மாறுபடும்.

ஹெச்.டி.எஃப்.சி (HDFC) எஃப்.டி விகிதங்கள்

ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது 7 நாள்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைகளுக்கு 3.5% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதங்களைப் பெறுவார்கள்.

SBI FD schemes interest rates HDFC FD schemes ICICI FD

ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) எஃப்.டி. விகிதங்கள்

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3% முதல் 7.2% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைகளுக்கு 3.5% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதங்களைப் பெறுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment